கண்டி மாவட்ட இஸ்லாமியர்களின் விபரம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
கண்டி மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களிலும் மொத்தமாக 1 இலட்சத்து 96 ஆயிரத்து 347
(14.3%) பேர் இஸ்லாமியர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதாக தொகை மதிப்பு புள்ளி விபரத்
திணைக்களம் இறுதியாக எடுத்த கணக்கெடுப்பின் பின்னர்
வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இம் மாவட்டத்தின் பிரதேச செயலக
ரீதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு,
பிரதேச செயலகம்
|
இஸ்லாமியர்களின் எண்ணிக்கை
|
அக்குறணை
|
41087 பேர்
|
உடுநுவர
|
27357 பேர்
|
உடபலாத்த
|
20784 பேர்
|
பாத்தும்பர
|
19504 பேர்
|
கண்டிச் சூழலும் கங்கவத்த
கோறளையும்
|
18869 பேர்
|
ஹரிஸ்பத்துவ
|
9623 பேர்
|
பூஜாபிட்டிய
|
9554 பேர்
|
பஸ்பாகே கோரளை
|
9028 பேர்
|
தெல்தொட்ட
|
7784
பேர்
|
யடிநுவர
|
7674 பேர்
|
குண்டசாலை
|
7459
பேர்
|
மெததும்பற
|
3990 பேர்
|
கங்ஹ இகலகோறளை
|
3862
பேர்
|
தும்பனே
|
2621 பேர்
|
தொலுவ
|
2610
பேர்
|
கதரிலியத்த
|
1553 பேர்
|
பாதகேவாகெட்ட
|
1382
பேர்
|
பன்வில
|
1113 பேர்
|
மினிப்பே
|
307
பேர்
|
உடுதும்பர
|
186 பேர்
|
இம் மாவட்டத்தில் மொத்தமாக 13
இலட்சத்து 69 ஆயிரத்து 899 பேர் வாழ்ந்து
கொண்டிருப்பதாகக்
கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 10 இலட்சத்து 05 ஆயிரத்து 468
(73.4%) பேர் பெளத்தர்களாகவும், 1 இலட்சத்து 96 ஆயிரத்து 347 (14.3%) பேர்
இஸ்லாமியர்களாகவும், 1 இலட்சத்து 34 ஆயிரத்து 256 (9.8%) பேர் இந்துக்களாகவும், 21
ஆயிரத்து 709 (1.6%) பேர் றோமன் கத்தோலிக்கர்களாகவும், 11 ஆயிரத்து 898 (0.9%)
பேர் ஏனைய கிறிஸ்த்தவர்களாகவும், 221 பேர் ஏனைய
சமயங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர் என்றும் தொகை மதிப்பு புள்ளி விபரத்
திணைக்களம் மேலும் தனது அறிக்கையில் தகவல் வெளியிட்டிருக்கிறது.
Post a Comment