Header Ads



பாதுகாப்பற்ற பூமியை குழந்தைகளுக்கு விட்டுச் செல்லமாட்டேன் - ஒபாமா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நேற்று ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, காலநிலை மாற்றத்தால் பூமி சந்தித்து வரும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, சுற்றுச் சூழலை பாதிக்கும் கார்பன் வெளியேற்றத்தை தடுக்க தான் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். 

அப்போது அவர் கூறியதாவது:- 

மறுசீரமைக்க முடியாத பூமியை உருவாக்கியதற்காக, நான் உங்கள் தலைமுறையையோ அல்லது வருங்கால தலைமுறையையோ கண்டிக்க முடியாது. 

நாம் உடனடியான செயல்பட வேண்டும். இதை ஒரு அதிபராக, ஒரு தந்தையாக, அமெரிக்காவின் குடிமகனாக இருந்து கூறிக்கொள்கிறேன். மறுசீரமைக்க முடியாத பாதுகாப்பற்ற பூமியை குழந்தைகளுக்கு விட்டுச் செல்லமாட்டேன். 

நாம் பாதரசம், கந்தகம் மற்றும் ஆர்சானிக் போன்ற விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள், காற்று மற்றும் நீரில் கலப்பதை கட்டுப்படுத்தி வருகிறோம். ஆனால், மின் நிலையங்கள் இப்போதும் அதிக அளவிலான கார்பனை வெளியேற்றுகிறது. அது பாதுகாப்பானதல்ல. அதை உடனடியாக நிறுத்த வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும், கனடாவிலிருந்து பைப் மூலம் அமெரிக்காவுக்கு எண்ணெய் கொண்டுவரும் திட்டம் சுற்றுச் சூழலை பாதிக்கும் விதத்தில் இருந்தால், அது உடனடியாக கைவிடப்படும் என்று கூறினார். இதற்கு மாற்று வழிகள் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.