அமைச்சர் உதுமாலெப்பையின் கவனத்திற்கு..!
(யு.எல்.எம். றியாஸ்)
சம்மாந்துறை சென்னல் கிராமம் -2ல் உள்ள பல வீதிகள் குன்றும் குழியுமாக
மிக நீண்ட காலங்களாக கவனிப்பாரற்றுக் கானப்படுகின்ன்றது இதனால் இப்பிரதேச மக்கள் பெரும் போக்குவரத்து கஷ்டங்களை அனுபவித்தது வருகின்றனர்.
இக்கிராமத்தின் மிகவும் பிரதான பாதைகளுள் ஒன்றான மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளி வீதியும் ஒன்றாகும். இவ்வீதியில் இக்கிராமத்தின் பிரதான பாடசாலை, பள்ளிவாசல் ஆகியனவும் அமைந்துள்ளது காலத்துக்கு காலம் இப்பிரதேசத்திற்கு பல்வேறு தரப்பை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் வருகை தந்து பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு ஏமாற்றப் பட்டுள்ளனர். எவரது வாக்குறுதியையும் நம்பத் தயாரில்லாத இக்கிராம மக்களின் வீதி அபிவிருத்தி எப்போது செய்யப்படுமோ என்ற ஏக்கத்தில் இப்பிரதேச மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சம்மந்தப் பட்டவர்களின் கண்கள் எப்போது திறக்கப்படுமோ..?
Post a Comment