'தீயில் கருகி மரணமடைந்த தேரர், தலதா மாளிகைக்கு எந்த பலனுமளிக்கவில்லை'
(ரமீஸ் இப்னு அப்துல் கையூம்)
"அண்மையில் தன்னைத்தானே மாய்த்துக்கொண்ட இந்திரரத்தின தேரரின் செயல் தலதா மாளிகைக்கு எந்த பலனுமளிக்கவில்லை" என தென் மாகாண சபையின் அங்கத்தவராகிய பத்தேகம சமிந்த தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
இந்த சம்பவத்தின்போது தகுந்த நீதிபோதனை ஒன்று புகட்டபட்டிருக்குமாயின் அவரது உயிரினை காப்பாற்றியிருக்கமுடியும்.அவரும் இந்த பரிதாபகரமான செயலை கைவிட்டிருக்க கூடும். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும்போது, அது மிகவும் கொடுரமாய் இருந்தது.இதை ஒலி பரப்பியவர்கள், அதற்குரிய விளைவுகளை சிந்திக்கவேண்டும் .
எனது பார்வையில் இந்த சம்பவமானது ஒரு தனி நபர் மூலமாகவோ அல்லது ஒரு குழுவின் மூலமாகவோ தூண்டப்பட்ட ஒரு விடயமாகும். அவரது அபிப்பிராயப்படி குற்ற்ஞ்சாட்டப்பட்டு விசாரிக்கபடாமளிருப்பவர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்படவேண்டும்.இந்தச்செயலானது துணிச்சலான ஒன்றல்ல.அவ்விடத்தில் சாமர்த்தியமான ஒருவர் இருந்திருப்பின் இதனை தடுத்திருக்க முடியும்.இது சட்டத்திற்கும் புத்த தர்மத்திற்கும் எதிரானது என்றும் கூரினார்.
சரியானவிடயம்தானே...
ReplyDeleteஇது மனிதனாகப்பிறந்தவன் மனிதானாகச்சிந்திப்பவன் பகுத்தறிவோடும் மனிதாபிமானத்தோடும் நடப்பவனுக்கு புரிகின்றது,ஏனோ காடையர்களுக்கு தெரியவில்லை.
தேரரே உங்களைப்போலவர்களால் நாட்டில் சமாதானம் உருவாகவேண்டும் இனியும் நீங்கள் அமைதியாக இருக்கவேண்டாம் மக்களை அணிதிரட்டி இவர்களுக்கெதிராக போராடி நம் நாட்டைக்காப்பாற்றி நம் எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ வழிகளைத்திறந்து கொடுப்போம்..