கம்பஹா மாவட்ட முஸ்லிம்களுக்கு சவூதி அரேபிய பேரீத்தம் பழங்கள்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டு நோன்பாளிகளுக்கு வழங்கவென சவுதி அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட பேரீத்தம் பழங்களில் கம்பஹா மாவட்டத்திற்குரிய பழங்களை அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் ஆலோசனையின்படி மேற்படிப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல்களுக்கு அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் இன்று (02) கம்பஹா காதி நீதிமன்றக் கட்டிடத்தில் வைத்து பகிர்ந்தளிக்கப்பட்டன.
மேற்படிப்பகுதி சமுகசேவையாளரான ஏ.சி.எச்.எம்.அன்வரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் டுலிப் விஜயசேகர, நீர்கொழும்பு நகரசபை பிரதி மேயர் சகாவுல்லா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மௌலவி நூறுல் அமீன் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
பத்த்ரிகைகளுக்கு இதுபோன்ற எய்திகளை கொடுப்பது ஒவ்வொரு ஆண்டும் நடந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் இந்த ஈத்தம் பழங்கள் உரிய நேரத்தில் சேரவேண்டிய மக்களுக்கு சென்று அடைகிறதா என்பது தான் கேள்விக்குறியும் வேதனையும் .நோன்புக்கு இன்னும் ஒரு மத காலம் இருக்கும் பொது இப்போது போடோவுக்கு போஸ் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?உரிய நேரத்தில் செய்தால் மக்களுக்கு கட்டாயம் கொடுத்தாக வேண்டும் இப்போது இப்படியான செய்திகளை வெளியிட்டு விட்டு நோன்பு காலங்களில் இவர்கள் காணாமல் போவிடுவார்கள் அப்போது இந்த பேரீத்தம் பழங்கள் இவர்களிடம் பணமாக மாற்ற பட்டு இருக்கும் ..மறுமை நாளில் கட்டாயம் இதற்க்கான தண்டனை கிடைக்காமல் விடாது ...
ReplyDelete