Header Ads



சிரியா யுத்தம் விரிவடைகிறது - ஜோர்தானுக்கு விமானங்களை அனுப்புகிறது அமெரிக்கா

ஜோர்டானும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவப்பயிற்சியை மேற்கொள்ள இருக்கின்றன. இதற்காக அமெரிக்கா தனது எதிரி ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் பேட்ரியாட்டிக் ஏவுகணைகள் மற்றும் எப்-16 போர் விமானங்களை ஜோர்டானுக்கு அனுப்புகிறது. 

இந்த ராணுவப்பயிற்சியின் மூலம் ஜோர்டானின் ராணுவத்திறமையையும்இ தோரணையையும் மாற்றி காட்டமுடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. மேலும் ஜோர்டான் அரசு விரும்பினால் அமெரிக்கா ராணுவம் அங்கேயே தங்கலாம் என்றும் அது கூறியுள்ளது.

 சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போருக்கு இரு தரப்புக்கும் வெளிநாட்டு உதவிகள் அளிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க ராணுவம் அங்கேயே தங்கலாம் என்கிற செய்தி அப்பகுதியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிரியாவிற்கு எதிரான தாக்குதலை தொடங்க தயாராகவுள்ள உள்ள ஜோர்டானுக்கு முன்னதாக அமெரிக்காவின் ராணுவத்தலைமையக அதிகாரி ஒருவர் உள்பட 200 ராணுவ வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.