ஹிட்லரின் பாதையில் மதவெறியன் நரேந்திர மோடி
சர்வாதிகாரி ஹிட்லரின் பாதையில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பயணிப்பதாக சமாஜ்வாடி கட்சி விமர்சித்துள்ளது. டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த சமாஜ்வாடி கட்சி தலைவர் கமால் பரூக்கி கூறியதாவது:-
2002ம் ஆண்டில் இருந்தே பா.ஜ.க.வில் மோடிக்கு முக்கியத்துவம் தரப்படுவதை பலர் எதிர்த்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், பா.ஜ.க. ஆகிய இயக்கங்களை சேர்ந்த பலரை மோடி ஓரங்கட்டி வருகிறார்.
தற்போது அத்வானி, யஷ்வந்த் சின்கா, ஜஸ்வந்த் சிங், ரவி சங்கர் பிரசாத், உமா பாரதி போன்றோர் மோடிக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
மோடி சக்தி வாய்ந்த மனிதராக உருவாகி வருகிறார். அவரது வழியில் வரும் யாரையும் மோதித்தள்ள அவர் தயங்க மாட்டார். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கை கூட அவர் ஓரம்கட்டி விடுவார். அதற்கு நீண்ட நாள் தேவையில்லை.
ஜெர்மனி வரலாற்றை பார்த்தால் ஆரம்ப காலத்தில் தனது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க யாரும் இருக்க கூடாது. தனக்கு முன்னாள் யாரும் முன்னேறி விடக் கூடாது என்ற மனநிலையில் இருந்த ஹிட்லர் பின்னாளில் சர்வாதிகாரியாக மாறினார்.
ஹிட்லரின் அதே பாதையில் நரேந்திர மோடி செல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நரேந்திரமோடியைத்தானே தொலைக்காட்சியொன்றில் பேட்டி எடுக்கும் போது முஸ்லிம்கள் சார்பாக உண்மையான சில கேள்விகேட்டபோது குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார் கெமறாவை ஓப் செய்யச்சொன்னார் பதில் சொல்ல முடியாமல் திக்கிமுக்கி சொல்லாமலே விட்டார். இவரெல்லாம் அரசியல் தீவிரவாதிகள்தான், அரசியலில் இருப்பதால் அது என்ன அங்கீகரிக்கப்பட்ட செயலா இல்லையே ஆகவே தன்னையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றும் கூட்டத்தில் இவரும் முன்னணியிலுள்ளவர் அவ்வளவுதான்...
ReplyDelete