அமெரிக்க கடலில் பிடிபட்ட ராட்சத சுறா மீன் (படம்)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஜேசன் ஜான்ஸ்டன் மற்றும் அவரது குழுவினர்இ ஹங்டிங்டன் கடலுக்குள் கரையில் இருந்து சுமார் 15 மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களின் வலையில் மிக கனமான ஓர் மீன் சிக்கியதை உணர்ந்தனர். வலைக்குள் சிக்கிய மீனை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கரைக்கு இழுத்து வந்துப் போட்ட அவர்கள் திகைத்துப் போயினர்.
சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத சுறா மீன் அந்த வலையில் சிக்கியிருந்தது.
கடற்கரையில் இருந்த எடைபோடும் இயந்திரத்தில் எடையிட்டு பார்த்தபோது 1300 பவுண்டுகளுக்கும் (சுமார் 600 கிலோ) அதிகமாக இருந்தது.
அப்பகுதியில் இதுவரை பிடிபட்ட சுறா மீன்களில் இதுதான் அதிக எடை கொண்டது என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே பகுதியில் உள்ள மெரினா டெல் ரே கடலில் 800 பவுண்ட் எடையுள்ள சுறா மீன் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment