Header Ads



காலி - கராப்பிட்டிய முஸ்லிம்களுக்கு உதவ முஸ்லிம் சட்டத்தரணிகள் முன்வருகை

பாரம்பரிய காணி உரிமை இருந்தும்கூட தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள முஸ்லிம்களின் நலனுக்காக வாதிடுவதற்கு 2 ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட பிரபல்யமான சட்டத்தரணிகள் முன்வந்துள்ளனர்.

காலி - கராப்பிட்டியாவில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் நிலையை கண்டறிவதற்காக சில சட்டத்தரணிகள் அங்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அதேவேளை பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் சிலரை உடனடியாக கொழும்புக்கு வரும்படியும் சில சட்டத்தரணிகள் அழைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களிடமிருந்து உரிய ஆதாரங்கள் கிடைத்தவுடன், அவர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அறியவருகிறது.

2 comments:

  1. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''இன்னொருவனுக்கு சொந்தமான ஒரு சாண் நிலத்தை அநியாயமாக அபகரித்தால் ஏழு பூமியளவு அந்நிலத்தை மறுமையில் கொண்டுவரப்பட்டு அநியாயக்காரனுக்கு மாலையாக அணிவிக்கப்படும்''. (புகாரி, முஸ்லிம்)
    அநியாயக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் (தண்டிக்காமல்) விட்டிருப்பதாக எண்ணவேண்டாம். (ஸூரா: இப்றாஹீம் 42)
    முஸ்லிம்களுக்கு எதிராக அநீதியிழைக்கப்படும் போது ஏனைய முஸ்லிம்கள் அவர்களின் உரிமையைக் கட்டிக் காப்பதற்கு உதவ வேண்டும். ''உன' சகோதரன் அநியாயக்காரனாக இருந்தாலும் (அவனைத் தடுத்து நிறுத்துவதன் மூலம்), அநியாயம் செய்யப்பட்டவனாக இருந்தாலும் உதவுவீராக'' (புகாரி)
    கராப்பிடிய வாழ் முஸ்லிம்களே புல்டொவ்சர் ஓட்டுனர்களோடு முடிந்தளவு போராடுங்கள். நான்கு பேர் சேர்ந்து கீழே இழுத்துப்போடுங்கள். நாம் கோழைகளாகவே உரிமைகளைக் கைவிடுவதை விட போராடி சாவுவது வீர மரணம் என்பதை மறவாதீர்கள்.
    அல்லாஹ்வை நெருங்குங்கள். இஸ்லாத்தை கடைபிடித்து வாழுங்கள். ஐவேளைத் தொழுகையையும் ஆண்கள் ஜமாஅத்தோடு பள்ளியில் தொழுங்கள். பெண்கள் ஆரம்ப நேரத்திலேயே வீடுகளில் தொழுதுவாருங்கள்.சுபஹ் தொழுகையை விட்டுவிடாதீர்கள். அல்லாஹ்விடமே கையேந்திப் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு விடிவைத் தருவான்.

    ReplyDelete
  2. Good move , Likewise Gnasara should be taken to court when he make a comment on muslims so he will keep his mouth shut.

    ReplyDelete

Powered by Blogger.