சவூதி அரேபியா, சிரியாவின் போராளிகளுக்கு வழங்கிய முக்கியத்துவமிக்க அங்கீகாரம்
(Tn) சிரியாவின் ஹஜ் யாத்திரை விண்ணப்ப உரிமையை அந்நாட்டின் அரச எதிர்ப்பு தேசிய கூட்டணிக்கு சவூதி அரசு வழங்கியுள்ளது. சவூதி அரசு கடந்த முறை சிரியாவின் ஹஜ் விண்ணப்பத்தை பஷர் அல் அஸாத் அரசின் ஒத்துழைப்பின்றி செயற்படுத்தியது.
இந்நிலையில் இம்முறை அந்தப் பணியை சிரியாவின் எதிர்த் தரப்பினரிடம் வழங்க தீர்மானித்திருப்பதாகவும் இதன்படி சிரிய நாட்டவருக்கான ஹஜ் கடமைக்கான அனுமதியை அவர்கள் வழங்குவார்கள் என்றும் ஹஜ் துறை அமைச்சின் பேச்சாளர் ஹதம் காதி ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.
இதன்மூலம் சிரிய எதிர்ப்பாளர்களுக்கு சவூதி அரசு மேலும் அங்கீகாரத்தை அளித்துள்ளது. ஒவ்வொரு முஸ்லிம் நாடுகளிலும் தலா ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 1000 யாத்திரிகர்கள் வீதம் ஹஜ் கோட்டா வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment