ஆண் பாதி, பெண் பாதி ..!
அறுபத்து ஆறு வயதில் வயிற்று வலி என்று மருத்துவமனைக்கு சென்ற சென்ற முதியவரை, பரிசோதித்த டாக்டர்கள் பெண் என்று கூறினால் எப்படி இருக்கும்?
இப்படியொரு அதிர்ச்சியான சம்பவம் ஹாங்காங்கில் நடந்துள்ளது. ஹாங்காங்கை சேர்ந்தவர் யுவாங்ஷூ (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 66 வயது முதியவரான இவர் 4.50 அடி உயரமே கொண்ட, ஆதரவற்றவர். சமீபத்தில் இவருக்கு வயிற்றில் வீக்கம் ஏற்பட்டது. இதனால் குவாங் வாஹ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம், அவரது உடலில் பெண்களுக்குரிய பாகங்களும் இருந்தன. பெண்களுக்குரிய ஒரு சுரப்பி அதிகமாக சுரந்து கொண்டிருந்ததால், அவரது வயிற்றில் வீக்கம் ஏற்பட்டு வலி ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்தனர். அதாவது யுவாங்ஷூ ஆணாக இருந்தாலும், அவர் உடலில் பெண்களுக்குரிய அனைத்து அமைப்புகளும் இருந்தன. இதை அவரிடம் தெரிவித்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுவரை மருத்துவ உலகில் 6 நபர்கள் மட்டுமே இதுபோன்று ஆண் பாதி, பெண் பாதி உடல் அமைப்புடன் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
யுவாங்ஷூ உடலில் ஆண் சுரப்பிகளும் இருந்துள்ளதால், அவர் பெண்களுக்குரிய உடல்வாகுடன் இல்லாமல் ஆணாக உள்ளார். இதுபோன்ற நபர்கள், ஏதாவது ஒரு பாலினத்துக்கான சுரப்பி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதுகுறித்து யுவாங்ஷூவிடம் கேட்டபோது, அவர் ஆண் சுரப்பிக்குரிய சிகிச்சையையே எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். இந்த வகை குறைபாடுக்கு டர்னர் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. 2,500 முதல் 3,000 பெண்களில் ஒருவருக்கு இந்த சிண்ட்ரோம் காணப்படுகிறது. இவர்கள் ஆண் தன்மையுடன் இருப்பார்கள்.
இதற்கு காரணம், பெற்றோரிடம் இருந்து எக்ஸ் குரோமோசோம் வந்தால், அது பெண் குழந்தையாக இருக்கும். ஒரு எக்ஸ் மற்றும் ஒரு ஒய் குரோமோசோம் வந்தால், அது ஆண் குழந்தையாக இருக்கும். டர்னர் சிண்ட்ரோம் என்பது வெறுமனே எக்ஸ் குரோமோசோம் மட்டுமே இருப்பது.
யுவாங்ஷூவிடம் டாக்டர்கள் துருவித்துருவி விசாரித்ததில், தனக்கு சிறுநீர் தானாக வெளியேறும் பிரச்னை இருப்பதாகவும், உயரமாக வளர்வது 10 வயதிலேயே நின்றுவிட்டதாகவும் கூறினார். யுவாங்ஷூக்கு பெண் உடலுக்குரிய அமைப்பு இருந்தாலும், அவரால் கர்ப்பம் தரிக்க முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment