'மஹிந்த எதிர்ப்புகளை மீறினால் தவறிழைத்தவர்கள் பட்டியில் அவரது பெயர்'
அரசியலமைப்பு ரீதியாக நாட்டை பிரிக்கும் 13 ஆவது திருத்தத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமென்று இல்லாவிட்டால் நாட்டில் சிங்கள பெளத்தர்களின் போராட்டம் வெடிக்குமென்றும் 29 சிங்கள பெளத்த கடும்போக்கு அமைப்புக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
கத்தோலிக்க ஆயர் பேரவை புலி ஆதரவாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் அந்த அமைப்புக்கள் குற்றம் சாட்டின.
கொழும்பு பெளத்தாலோக மாவத்தையிலுள்ள பெளத்த மகா சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனா, சிங்கள ராவய, ராவணா தேசிய சங்கம் சம்மேளனம் உட்பட 29 கடும் போக்கு சிங்கள பெளத்த அமைப்புகளைச் சார்ந்த பெளத்த குருமார் உட்பட அமைப்புகளின் பிரதிநிதிகள் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
ஒற்றையாட்சியை பாதுகாப்போம் மாகாண சபை முறையை ஒழிப்போம் என்ற தொனிப் பொருளில் மாகாண சபைகளை ஒழிப்பதற்கான தேசிய கூட்டமைப்பு என பெயரிடப்பட்ட அமைப்பே இவ் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியிருந்தது.
இங்கு உரையாற்றிய பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொட அத்தே ஞானசார தேரர்,
இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் மீண்டும் பிரிவினைவாத விஷத்தை வடமாகாண சபைத் தேர்தல் என்ற பெயரில் கக்க ஆரம்பித்துள்ளன. வத்திக்கானின் அறிவுறுத்தல் மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக கத்தோலிக்க ஆயர் பேரவையும் 13 ஆவது திருத்தத்தை ஒழிக்கக் கூடாது.வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றும் அறிவித்துள்ளது. அன்று யுத்தம் இடம்பெற்ற கால கட்டத்தில் இந்தியாவின் யுத்தம் தொடர்பான விசேட நிபுணர் அசோக் சிங்கலால் பிரபாகரனின் ஆயுத போராட்டத்தின் பின்னணியில் கத்தோலிக்க சபை இயங்குவதாக தெரிவித்திருந்தார். இன்று இது உண்மையாகியுள்ளது.
கத்தோலிக்க சபை 13 இற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் இந்த உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 1987 இல் ஜே.ஆரின் அடக்குமுறைக்கு மத்தியில் சிங்கள இளைஞர்கள் 66,000 பேரை கொலை செய்து இந்தியாவினது தேவைக்காக பலாத்காரமாக எம்மீது சுமத்தப்பட்டதே 13 ஆவது திருத்தமாகும்.
இதன்போது விடுதலை புலிகளை நிராயுதபாணியாக்குவோம் என இந்தியா உறுதியளித்தது. ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவும் இல்லை’’ மாகாண சபை முறைமையினால் எந்தவிதமான நன்மையும் கிடைக்கவும் இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும் இல்லை.
இவ்வாறானதோர் நிலையில் இந்தியாவின் அழுத்தம் காரணமாக அரசாங்கம் செப்டெம்பரில் வடமாகாண சபை தேர்தலை நடத்தப் போகின்றது. 26,000 படையினர் உயிர்த்தியாகம் செய்து பாதுகாத்த நாட்டை வடமாகாண சபைத் தேர்தலை நடத்தி மீண்டும் பிரிவினைவாதத்திற்கு தள்ளவா அரசாங்கம் முயற்சிக்கின்றது. அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது மனச்சாட்சியை இக் கேள்வியை தட்டிக்கேட்க வேண்டும். யுத்த காலத்தில் அதற்கெதிரான அமைப்புக்களை நடத்தியோர்இன்று அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு 13 ஆவது திருத்தத்தை ஆதரிக்கின்றனர். வடமாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமென்கின்றனர்.
இத் தேர்தல் நடத்தப்படக்கூடாதென்று கூறும் தேசியவாதிகளும்இந்த அரசாங்கத்தில் உள்ளனர். இவ்வாறான முரண்பாடுகளை கொண்டவர்களுடன் இணைந்து அரசாங்கம் நடத்திய வல்லமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே உள்ளது. 13 ஐ ஆதரிப்பவர்கள் இலங்கையில் இனப்பிரச்சினை உள்ளதா என்று தமது மனச்சாட்சியிடம் கேட்க வேண்டும்.
ஏனென்றால் கொழும்பில் மடடும் 280,000 அதாவது நூற்றுக்கு 11 வீதம் தமிழ் மக்கள் வசிக்கின்றனர். நாடு பூராவும் பரந்து வாழ்கின்றனர். இனப்பிரச்சினை இருக்குமானால் இப்படி வாழ முடியுமா? வீதிகள் புனரமைப்பு, பாலங்கள் அமைத்தல் என்பதை விட வடபகுதி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்ப்புகளை மீறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடமாகாண சபை தேர்தலை நடத்தினால் வரலாற்றில் தவறிழைத்தவர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பிடிக்கும் என்றும் காலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
ரஜவத்தே வப்ப தேரர் (தலைவர் தேசிய சங்க சம்மேளனம்)
இந்தியாவில் ஒரு மாநிலத்தின் பரப்பளவு கூட இலங்கைக்கு கிடையாது. அவ்வாறானதோர் நிலையில் எதற்கு எமக்கு மாகாண சபைகள், எனவே 13 ஒழிக்க வேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்.
அக்கீமன தயாரத்ன தேரர் (தலைவர் சிஹல ராவய)
வடக்கில் சிங்கள மக்களை மீளக் குடியேற்றாது தேர்தலை தேர்தல்கள் ஆணையாளர் நடத்தவாரேயானால் அது சட்டவிரோத செயலாகும். சம்பந்தன் எம்.பி. சிங்கள மீள்குடியேற்றத்தை எதிர்க்கின்றார். எனவே தேர்தலை நடத்தக்கூடாது.
கிரம விமல ஜோதி தேரர் (பொதுபலசேனா தலைவர்)
சிங்கள பெளத்தர்களின் எதிர்ப்பையும் மீறி வடமாகாண சபை தேர்தலை நடத்த முயற்சித்தால் போராட்டம் வெடிக்கும்.
கலாநிதி சூரிய குணசேகர
13 ஆவது திருத்தத்திற்கான இலங்கை -இந்திய உடன்படிக்கை திடீரென உருவாகவில்லை. இந்தியா- இலங்கையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற சதித்திட்டத்துடன் திட்டமிட்டே இவ் உடன்படிக்கையை மேற்கொண்டது.
நாட்டின் பெரும்பான்மை இன மக்களின் மொழியில் சொல்வதானால் தமிழ் புலி பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது,...ஆனால் இப்போது சிறுபான்மை இன மக்களின் மொழியில் சொல்வதென்றால் பெளத்த பயங்கரவாதம் போராட்டமாக வெடிக்கபோகிறது என்பது மிகைஅன்று
ReplyDeleteநீ பேசுவதும் சிரிப்பான செய்தி தான். பைத்தியக் காரன் பேசுவதும் சிரிப்பான செய்தி தான்.
ReplyDelete