Header Ads



மாவனெல்லை பிரதேச சபை தலைவருக்கு மரணதண்டனை


(Tm) மாவனெல்லை பிரதேச சபையின் தலைவர் கே.பி பியதிஸ்ஸவிற்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கேகாலை மேல்நீதிமன்றத்தின் நீதிபதி மேனகா விஜயசுந்தரவே மேற்கண்டவாறு இன்று புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளார். 

வாகனசாரதியான கே.ஜி. பிரியரத்னவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு படுகொலைச்செய்த குற்றச்சாட்டில் அவரை நீதிமன்றம் குற்றவாளியாக இனங்கண்டதையடுத்தே அவருக்கு மரணத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
 
பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே குறித்த சாரதியை 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி படுகொலைச்செய்ததாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
 
சம்பவம் இடம்பெற்ற காலத்தில் அவர் பிரதேச சபைத்தலைவராக பதவியில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.