'நான் காத்ததன்குடிக்கு வர இருப்பதை அறிந்ததும் சில அரசியல்வாதிகளுக்கு வயிற்றோட்டம்'
நான் காத்ததன்குடிக்கு வர இருப்பதாக கேள்விபட்டதுமே அங்குள்ள சில அரசியல்வாதிகளுக்கு கைகால்கள் உதறல் எடுத்துள்ளதாகவும்,இன்னும் சிலருக்கு வயிற்றோட்டம் பிடித்துள்ளதாகவும் கேள்விபட்டு நான் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன். எனது வருகை ஏன் காத்தான்குடி அரசியல்வாதிகளுக்கு இப்படி ஓர் நிலையை ஏற்படுத்தியுள்ளது? ஏன் அவர்கள் எனது வருகையை கேள்விப்பட்டு அச்சம் கொள்ள வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி.
காத்ததன்குடியில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் எதிர்வரும் 29ம் திகதி அஸாத் சாலி நடத்தவிருந்த மக்கள் சந்திப்புக்கு ஆரம்பத்தில் அனுமதி அளிக்கப்பட்டு பின்னர் அது மறுக்கப்பட்டமை தொடர்பாக அஸாத் சாலி ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இந்த அரசாங்கத்தின் அராஜகத்தின் உச்சகட்டமாக அண்மையில் நான் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது எனக்காகவும் எனது விடுதலைக்காகவும் பிரார்த்தனை புரிந்தும் சாத்வீகமான முறையில் கடையடைப்புக்களைச் செய்தும் குரல் கொடுத்த ஏராளமான மக்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர்.இந்த மக்களை நேரடியாகச் சந்தித்து எனது நன்றிக்கடனை நிறைவேற்றுவதற்காகவே நான் எதிர்வரும் 28, 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் அம்பாறை. மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான விஜயத்தை மேற்கொள்கிறேன்.அரசியல் மாநாடுகள் நடத்துவதோ அல்லது கருத்தரங்குகள் நடத்துவதோ எனது இந்த விஜயத்தின் நோக்கம் அல்ல. மக்களுக்கு சரியான முறையில் சேவைகளை செய்திருந்தால. மக்களின் தேவைகளை நிறைவேற்றியிருந்தரல். அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் தனது சமூகத்துக்காக உரிய முறையில் குரல் கொடுத்திருந்தால் எந்தப் பிரதேசத்தின் அரசியல் வாதியும் இன்னொரு பிரதேசத்து அரசியல் வாதிகளின் வருகையைக் கண்டு அஞ்சி நடுங்கத் தேவையில்லை.
இந்தக் கூட்டத்துக்கான அனுமதியை தடுத்து நிறுத்த காத்தான்குடி நகர சபையின் பிரதித் தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீம் என்பவர் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டதாக நான் கேள்விபட்டேன். இவர் அந்தப் பிரதேசத்தின் மார்க்க அறிஞர் ஒருவரின் சீடர் என்றும் நான் கேள்விபட்டுள்ளேன். இவருக்கும் இவருடைய அரசியல் குருவுக்கும் சரியான அரசியல் மற்றும் மார்க்க கருத்துக்கள் பேதாதிக்கப்பட்டிருக்குமானால் இவர்கள் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்பதே எனது கருத்தாகும்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் காத்ததன்குடியில் எனக்கு வாக்களித்த ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். நான் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படாவிட்டாலும் கூட என்னை நம்பி வாக்களித்த அவர்களுக்கு சேவை செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்குள்ளது. தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுவிட்டு அவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கூத்தும் கும்மாளமுமாகத் திரியும் அரசியல்வாதி அல்ல நான்.
என்னை நம்பி வாக்களித்த மக்களை மற்றும் என்மீது நல் அபிமானம் கொண்டுள்ள எனது தாய்மார்களையும் உடன் பிறவா சகோதர சகோதர சகோதரிகளையும் சந்திக்கும் உரிமை எனக்கு எப்போதும் உள்ளது. அதில் மற்றவர்கள் தலையீடு செய்து அதை தடுப்பது ஜனநாயகம் அல்ல. அது அரசியல் நாகரிகமும் அல்ல. அரசியல் நாகரிகம் ஜனநாயகம் பற்றி எல்லாம் கிழக்கு மாகாணத்தின் நமது அரசியல்வாதிகளுடன் பேசுவது அர்த்தமற்றது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் அதை அவர்களுக்கு நினைவூட்டவேண்டிய தார்மிகப் பொறுப்பும் எனக்கு உள்ளதாலேயே நான் இதைக் குறிப்பிடுகின்றேன்.
நீங்கள் காத்தனகுடியில் நான் மக்களை சந்திப்பதை தடுக்கலாம். அது உங்கள் அதிகார வெறியின் உச்ச கட்டம். நிச்சயம் அது நிலைத்து நிற்கும் ஒன்றல்ல. ஆனால் அதேநேரம் காத்தான்குடி மக்கள் என்னை சந்திப்பதை எந்த அரசியல் சக்தியாலும் தடுக்க முடியாது. நான் மக்களை சந்திக்கும் இடத்துக்கு அவர்கள் என்னைத் தேடிவந்து சந்திப்பார்கள் என்று நான் நிச்சயம் நம்புகின்றேன். ஏனெனில் அந்த மக்கள் என்மீது கொண்டுள்ள நேசமும் பாசமும் வெறும் அரசியல் தொடர்புகளால் உருவானதல்ல.அரசியல் ரீதியாக அநாதையாக்கப்பட்டுள்ள அந்த மக்களுக்கு ஆறுதலாக நான் இருக்கின்றேன் என்ற நம்பிக்கையில் கட்டி எழுப்பப்பட்டதே இந்த பிணைப்பு. இது தேர்தல் காலத்து உறவுகளைப் போன்றதல்ல. நிச்சயம் நிலைத்து நிற்கும் உறவு. அதனை மேலும் வலுப்படுத்த இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் நான் விரைவில் காத்தான்குடி மக்களை அந்த மண்ணிலேயே சந்திப்பேன்.
அஸாத் சாலி
பொது செயலாளர்
தேசிய ஐக்கிய முன்னணி
அஸ்ஸலாமு அழைக்கும் சேர் காத்தான்குடி
ReplyDeleteக்கு வந்து எங்களை சந்திப்பது கஷ்டமாக இருந்தால் உங்களை எப்படி சந்திக்க வேன்டும் உங்களுடைய நம்பர் தாருங்கள் இமெயில்
uwais 1979@gmail .com
சகோதரர் ஆசாத் சாலி அவர்களே!
ReplyDeleteஅரசியல் ரீதியாக உங்கள் கருத்து சரியானதாக இருந்தாலும், வாய் கொஞ்சம் நீளம். வாழை பழத்தை உரித்து தரமுடியும். திண்டு தரமுடியாதே! பிரதி தவிசாளர் ஒரு மார்க்க அறிஞரின் சீடர் என்று கேள்விப்பட்டுள்ளேன். இவருக்கும் இவரது அரசியல் குருவுக்கும் சரியான மார்க்க கருத்துக்கள் போதிக்கப்பட்டிருந்தால், இவ்வாறு கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்பது அந்த அறிஞரை இம்சிப்பது போல் தெரிகிறது. எந்த மார்க்க அறிஞரும் அல்லது எம்மதத்தவராக இருந்தாலும் மற்றவருக்கு தீங்கு செய்யும்படி கூறவில்லை.ஏன் பௌத்த தர்மத்திலும் அவ்வாறு கூறவில்லை.பொது பல சேனாவை எதிர்த்து அரசியல் செய்யும் நீங்கள் ஒரு போதும் பௌத்த மதத்தை இம்சிக்கவில்லையே! அப்போ இப்ப மட்டும் நமது மார்க்க அறிஞரை இம்சிப்பது போல அறிக்கை விடுவது என்ன நியாயம்? குறித்த அறிஞர் மூலமாக எதையோ எதிர்பார்க்கிறீர்களா? பிரதி தவிசாளரும் பிரதி அமைச்சரும் செய்யும் வேலைகளுக்கு அவர்களே பொறுப்பு. வாய்க்குள் விரலை வைத்தால் கடிக்கத்தெரியாத சின்ன பிள்ளைகள் இல்லை.
Mr jajani you dont no any thing I thing that your hisbullah supoter and dont know muslim feeling too
Deleteகிண்ணியாவுக்கும்,மூதூருக்கும் வாருங்கள்.இன்ஷா அல்லாஹ் உங்களை வரவேற்க காத்திருக்கின்றோம்.நிச்சயம் உண்மை வெல்லும்.
ReplyDeleteSir Azath, You are our leader. ..we are always with you...You are a real lion for our muslim community in Sri Lanka. ..
ReplyDeleteWel come sammanthurai
ReplyDeleteசார். அசாத்சாலி......
ReplyDelete"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதுதான் உண்மை என்பதை நீங்க சிறு வயெதுல கேள்விப்பட்டு இருப்பிங்க. எவனோ சொன்னதாஹ சொல்லி ஒரு மார்க்க அரிஞ்செரை குற்றம் சாட்டுவது முறை யல்ல...சார் . மற்றவர்ஹல் கருத்து கூறுவது போன்று நீங்கள் கூற வேண்டாம்.
ஏன் எனில் முஸ்லிம்களின் விடயெதில் கூடுதலாஹ கரிசனை காட்டுபவர் என நம்பிக்கை வைத்துள்ளோம்.......
சார். அசாத்சாலி......
ReplyDelete"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதுதான் உண்மை என்பதை நீங்க சிறு வயெதுல கேள்விப்பட்டு இருப்பிங்க. எவனோ சொன்னதாஹ சொல்லி ஒரு மார்க்க அரிஞ்செரை குற்றம் சாட்டுவது முறை யல்ல...சார் . மற்றவர்ஹல் கருத்து கூறுவது போன்று நீங்கள் கூற வேண்டாம்.
ஏன் எனில் முஸ்லிம்களின் விடயெதில் கூடுதலாஹ கரிசனை காட்டுபவர் என நம்பிக்கை வைத்துள்ளோம்.......
Best muslim actor in 2013
ReplyDeleteDo you know Mr Mohamed jahani, Many Muslim people live in kattankudy of Eastern province at the same time happen many fault and foolish living in same place.
ReplyDeleteDear brother Azath Salih don't think about the bad people and bad side as a politician try to go everywhere and help every nation. If you really have a good heart to help don't think do any religious politic, just think one nation and one country then forward your future politic. Best of luck Dear Brother asath Salih