Header Ads



காலியில் முஸ்லிம்களை பலாத்காரமாக வெளியேற்ற முயற்சி

காலி - கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள 32 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பிரதேச முஸ்லிம்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

எமது இணையத்திற்கு பிரபல சட்டத்தரணி ஒருவர் மூலம் முதலில் இது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இச்சம்பவத்தினால் பாதிப்புகளை எதிர்நோக்கும் றியாஸ் என்பவர் இதுதொடர்பில் எம்மிடம் கருத்து வெளியிடுகையில்

குறித்த பகுதியில் வசிப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உண்டு. நேற்று சனிக்கிழமை இராணுவத்தின் துணையுடன் வந்த நகர அபிவிருத்தி அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவுப்படி எங்களை வெளியேறுமாறு சொன்னார்கள். நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தோம். மாற்று ஏற்பாடுகள் செய்துதராமல் நாம் எங்கு செல்வது? இது அநீதியானது.

2000 ஆம் ஆண்டில் காணி சுவீகரிப்பு சட்டத்தின்கீழ் பேருந்து நிலையம் அமைப்பதற்காக எங்களை வெளியேற்ற முயற்சித்தார்கள். தற்போது பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுவிட்டது. இப்போது பேருந்து நிலையம் செல்வதற்கு வசதி தேவையாம். இதற்காக எங்களை வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். நாம் இதுதொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.

யாழ் முஸ்லிம் இணையத்திற்கு கிடைக்கும் தகவல்களின்படி இராணுவத்தினரின் முயற்சியுடன் இங்கிருந்து பலாத்காரமாக முஸ்லிகளை வெளியேற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைளுக்கு எதிராக நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட முலிம்கள் சார்பில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படவிருப்பதாக அறியவருகிறது.

6 comments:

  1. idha azwer kaadula poduga avar enna sollraar endu paarpom. appadi avar idu patri karuththu therivikka villai endral. adei oru news aaga arivikkawum

    ReplyDelete
  2. இந்த ரஜபக்ஸ அன் கோ இருக்கும் வரை முஸ்லிம்களை கருவருத்துப் போட்டுத்தான் விடுவார்கள்.

    தங்களது சுயநலத்துக்காகவும் பட்டம் பதவிக்காகவும் முட்டுக் கொடுக்கும் இந்த( முஸ்லிம் அரசியல்வாதிகள் ) சுயநலக் கும்பல்கள் எங்கு சென்றுவிட்டார்கள்..?????

    ReplyDelete
  3. DEAR OUR MUSLIM "LEADERS" PLEASE WAKE UP!!!! THIS IS THE WRONG TIME TO SLEEP!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  4. WHO GAVE THEM LEADER POST THOSE ARE SELF APPOINTED LEADERS making money is the one and only objective of these fellows. From MH to today's politicians this is the objective

    ReplyDelete
  5. Please inform to Muslims countries about this

    ReplyDelete

Powered by Blogger.