காலி, கராப்பிட்டிய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்
காலி - கராப்பிட்டிய முஸ்லிம்களுக்குரிய குடியிருப்புகளை புல்டோசர்கள் சகிதம் அகற்றவந்தவர்களை தடுத்து நிறுத்திய பெண்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பிரதேச முஸ்லிம்கள் சார்பில் பேசிய றியாஸ் என்பவர் உறுதிப்படுத்தினார்.
இன்று புதன்கிழமை கராப்பிட்டிய முஸ்லிம் குடியிருப்புகளை அகற்றுவதற்கு சென்றுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் கொந்தராத்து காரர்களை முஸ்லிம் பெண்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன்போது குறிப்பிட்ட அதிகாரிகளும், கொந்தராத்துகாரர்களும் முஸ்லிம் பெண்கள் எதிர்த்தாலும் அவர்களின் உடல்களுக்கு மேல் புல்டோசர்களை செலுத்தி குடியிருப்புகளை அகற்றுவொமென அச்சுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக கொந்தராத்துகாரர்கள் தாம்மை முஸ்லிம் பெண்கள் எதுவும் செய்ய முடியாதெனவும், தாம் அதிகாரம் பெற்றவர்கள் எனவும் எவருக்கும் அஞ்சப்போதவில்லையெனவும் கூறி, முஸ்லிம் பெண்களை தூஷித்துள்ளனர்.
முஸ்லிம் பெண்கள் மற்றும் ஆண்களின் எதிர்ப்பு காரணமாக முஸ்லிம் குடியிருப்புகளை அண்டிய பகுதிகளில் புல்டோசர்கள் மூலம் தொடர்ந்து உடைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன.
இதேவேளை நகர அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் கொந்தராத்து காரர்கள் தம்மை அச்சுறுத்தியதாககூறி அங்குள்ள முஸ்லிம்கள் சட்டத்தரணிகளின் ஆலோசனைக்கு இணங்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''இன்னொருவனுக்கு சொந்தமான ஒரு சாண் நிலத்தை அநியாயமாக அபகரித்தால் ஏழு பூமியளவு அந்நிலத்தை மறுமையில் கொண்டுவரப்பட்டு அநியாயக்காரனுக்கு மாலையாக அணிவிக்கப்படும்''. (புகாரி, முஸ்லிம்)
ReplyDeleteஅநியாயக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் (தண்டிக்காமல்) விட்டிருப்பதாக எண்ணவேண்டாம். (ஸூரா: இப்றாஹீம் 42)
முஸ்லிம்களுக்கு எதிராக அநீதியிழைக்கப்படும் போது ஏனைய முஸ்லிம்கள் அவர்களின் உரிமையைக் கட்டிக் காப்பதற்கு உதவ வேண்டும். ''உன' சகோதரன் அநியாயக்காரனாக இருந்தாலும் (அவனைத் தடுத்து நிறுத்துவதன் மூலம்), அநியாயம் செய்யப்பட்டவனாக இருந்தாலும் உதவுவீராக'' (புகாரி)
கராப்பிடிய வாழ் முஸ்லிம்களே புல்டொவ்சர் ஓட்டுனர்களோடு முடிந்தளவு போராடுங்கள். நான்கு பேர் சேர்ந்து கீழே இழுத்துப்போடுங்கள். நாம் கோழைகளாகவே உரிமைகளைக் கைவிடுவதை விட போராடி சாவுவது வீர மரணம் என்பதை மறவாதீர்கள்.
அல்லாஹ்வை நெருங்குங்கள். இஸ்லாத்தை கடைபிடித்து வாழுங்கள். ஐவேளைத் தொழுகையையும் ஆண்கள் ஜமாஅத்தோடு பள்ளியில் தொழுங்கள். பெண்கள் ஆரம்ப நேரத்திலேயே வீடுகளில் தொழுதுவாருங்கள்.சுபஹ் தொழுகையை விட்டுவிடாதீர்கள். அல்லாஹ்விடமே கையேந்திப் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு விடிவைத் தருவான்.