Header Ads



பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் கவனத்திற்கு..! (படங்கள் இணைப்பு)

(ஏ. எல். ஜுனைதீன்)

    சாய்ந்தமருது எல்லையிலுள்ள நுழை வாயிலில் பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு திறந்து  வைக்கப்பட்டிருக்கும் 'வரவேற்பு தோரணம்' அதில் எந்த ஒரு வாசகமும் எழுதப்படாமல் அப்படியே 10 வருடங்களாக எதுவித தீர்வும் இன்றி விடப்பட்டிருப்பது குறித்து இப்பிரதேச புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

    இவ் வரவேற்புத் தோரணத்தில் ஒரு சாரார்   'கல்முனை மாநகர சபை உங்களை அன்புடன் வரவேற்கின்றது' எனவும் மற்றும் ஒரு சாரார்  'சாய்ந்தமருது உங்களை அன்புடன் வரவேற்கின்றது' என்றும் எழுத வேண்டும் என இரண்டு கருத்துக்களை வெளியிட்டு முரன்பட்டுக் கொண்டதை அடுத்து வரவேற்பு தோரணம் (மக்களின் பணத்தில் பல இலட்சம் ரூபா செலவிடப்பட்டு) எதற்காக அமைக்கப்படுகின்றதோ அந்த நோக்கம் இங்கு நிறைவேற்றப்படாமல் அப்படியே இன்று வரையும் வெறுமனே விடப்பட்டிருக்கிறது .எனத் தெரிவிக்கப்படுகின்றது.

    சாய்ந்தமருதிலுள்ள இவ் வரவேற்பு தோரணம் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவர் அக்காலத்தில் துறைமுகங்கள் அபிவிருத்தி கப்பல்துறைஇ கிழக்கு அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சராகப் பதவி வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    எது எப்படி இருப்பினும் வரவேற்பு தோரணத்தை அழகுபடுத்தி வரவேற்பு வாசகத்தை எழுதும் முடிவை கல்முனை மாநகர சபை மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிப் அவர்கள் சீக்கிரம் எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் இப்பிரதேச மக்களால் விடுக்கப்படுகின்றது. 



10 comments:

  1. Ithuthaan indraia muslim ummavin otrumai. Kalmunai, sainthamaruthu, maruthamunai, ninthavaur, sammanthurai endra pirthesa vaatham paarthu paarthu kuddichuvarahip poohum muslim ummavin thalai vithiai allikum intha arasial vaathihaluku Allahvidam irunthuthaan padipinai varavendum. kurruhia sinthanai il irukum muslimkal thamathu sinthanaiai thiraka vendum.

    ReplyDelete
  2. I kindly request to Jaffna Muslim web site that do not publish this type of narrow minded article and news becasue this will create problem in our muslim community.

    ReplyDelete
  3. நமது சாய்ந்தமருது புத்தி ஜீவிகளின் மனநிலையில் மாற்றம் ஏற்படின் இலகுவாக முடிந்து விடும் அந்த அளவுக்கு மனநிலையில் மாற்றம் என்பது முயல் கொம்புதான், ஹரிசினால் இதில் முடிவு எடுக்கமுடியாது,...சிலவேளை கல்முனை மாநகரிலிருந்து பிரிந்து சாய்ந்தமருது பிரதேசபை உருவானால் உடனடியாகவே., செய்தியாளரின் செய்திக்கு பலன் கிடைக்கும்....அதுவரை....?????.

    ReplyDelete
  4. பிரதேச வாதத்தை தோற்றுவிக்காத விதத்தில் அரபியில் أهلا و سهلا என்று மாத்திரம் எழுதி அதற்கான மொழிபெயர்ப்புகளை நல வரவாகுக wel come மாத்திரம் எழுதினால் போதும்.
    இது எனது கருத்து

    ReplyDelete
  5. சாய்ந்தமருது என்பது கல்முனையின் ஓர் அங்கம். இங்குள்ளது சாய்ந்தமருதின் எல்லை அல்ல. கல்முனையின் எல்லை என்பதே சரி. இதில் கல்முனை என்ற வாசகம் பொறிக்க சில பிரதேச அறிவற்றவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிய முடிகிறது. இது எப்படி என்றால் கொழும்பின் எல்லை தொட்டலங்க என்ற ஊரில்தான் உள்ளது. ஆகவே அதில் கொழும்பு என எழுதாது தொட்டலங்க என எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதை போன்றதாகும். இந்த நுழை வாயிலில் கல்முனை வரவேற்கிறது என எழுத சாய்ந்தமருதின் ஜும்ஆ பள்ளி மற்றும் உலமா சபை என்பன குரல் கொடுத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
    -முபாறக் அப்துல் மஜீத்

    ReplyDelete
  6. நல்லாதானே போய்க்கிட்டு இருக்கு ஏன்... இவர இலுத்து இந்த வம்பில மாட்டி விர்ரிங்க. எங்களால முடிஞ்சா இந்த 10 வருடத்தில் செய்து முடித்திருப்போம்ல...குருடனுக்கிட்ட கருப்பு எது சிவப்பு எது என்று கேட்டா எத காட்டுரது...... பாவம் அவர விடுங்கப்பா... நிம்மதியா தூங்கட்டும்.

    ReplyDelete
  7. கல்முனை மாநகரம் உங்களை வரவேற்கின்றது என்று எழுதுவதற்கு சிலரின் ஊர்த் துவேசம் தடையாக உள்ளது. இதனை எழுதினால் தனது அரசியில் லாபம் இழக்கப்படுமோ என ஹரீஸ் அச்சப்படுகிறார். மதில் மேல் பூனையாக குந்திக் கொன்டிருக்கும் இரட்டை வேட அரசியலையே அவர் தொடர்கிறார். இவ்வாறாக மறைந்து கிடக்கும் ஊர்த் துவேசங்களை தோண்டி எடுத்து பிரதேசவாத வியாபாரம் செய்யும் சில வியாபாரிகளை தனது அரசியல் கொந்தராத்தின் முதலீடாக சீராஸ் மீராசாகிபு தேடி எடுத்துள்ளார். ஏனெனில் பிரதேச வாதம் அடங்கினால் அவரின் அரசியலும் அஸ்த்தமித்துப் போகும். அஸ்த்தமனம் தென்பட்டால் இதனைக் கிளரிவிடுகிறார். இதில் ஆடைக்கு மேலால் சொறிந்நு சொறிந்து கதைப்பதற்கு வேறு ஒன்றும் இரகசியம் கிடையாது..........

    ReplyDelete
  8. It's very simple

    பரீட்சைத் தாளிலே வருவது போல

    ........................................(கல்முனை/சாய்ந்தமருது) உங்களை வரவேற்கிறது என்று அடைப்புக்குறிக்குள் இரண்டு ஊரின் பெயரையும் எழுதிவிட்டால் தேவையானவர்கள் அவர்களுக்குரியதைப்போட்டு புரிந்த கொள்ளட்டுமே.

    இது எப்படி இருக்கு?

    What a shame... இரண்டு ஊர்களுக்கு இடையே ஒரு வரவேற்புப்பதாகையில் சமரசம் காணமுடியாத நாம் எவ்வாறு உலகை ஆளும் கனவுடன் வாழ்கின்றோம்?

    ReplyDelete
  9. Just Remove this Construction...

    ReplyDelete
  10. oruththerukkum vana ....digitel led board ondru pottu.athil.sainthamaruthu irunthe maruthemunai varai ulle oor pare potubom.sainthamaruthu17 thotekkem kalmunai 1,maruthamunai thonkel varekkum potunge athu sari varum

    ReplyDelete

Powered by Blogger.