அம்பாறையில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம்
(யு,எல்,எம்,றியாஸ்)
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினம்களாக கடும் வெப்பம் நிலவி வருகின்றது இதனால் மக்களின் அன்றாட இயல்புநிலமைகள் வெகுவாக பாதிக்கப்பட்டிள்ளதுடன் கடுமையான உஷ்ணத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
காலை பதினொரு மணிக்குப்பின் மக்கள் நடமாட்டம் வீதிகளில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது இன்று திங்கள்கிழமை அம்பாறை மாவட்டத்தில் கடுமையான வெப்பமான காலநிலை காணப்பட்டது.
இன்று பொத்துவில் வளிமண்டவியல் நிலையத்தில் நண்பகல் இரண்டு மணிக்கு 36.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். ஆனால் இன்று மாலை ஐந்து மணிக்கு கணக்கிடப்படும் வெப்பநிலை அளவில் அதிகரித்துக்கானப்படக்கூடிய நிலைமை இருப்பதாகவும் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஐ, எம். நஹீம் தெரிவித்தார்.
In gulf countries the temperature is even double than Ampara district. Please pray allah to bring rain and less temperature.
ReplyDelete