இந்திரரத்ன தேரரின் இறுதிக்கிரிகைகளில் வெட்கக்கேடான செயல்கள்..!
(அலிதம்பி நகீல்)
காலம் சென்ற இந்திரரத்ன தேரரின் இறுதிக்கிரிகைகளின் போது சிலரது நடவடிக்கைகள் அவருக்கு அவமரியாதையாகவும் அவமானத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது என இந்திரரத்ன தேரரரின் இறுதிக்கிரிகைகளுக்கான ஏற்பாட்டுக்குழு அவர்களது நடவடிக்கையை கன்டித்துள்ளது.
இந்த இறுதிக்கிரிகையைத்தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் மொறதொட்ட றாகுல தேரரினால் இந்தவிடயங்கள் அறிவிக்கப்பட்டது. பொறொன விகாரையின் பங்காளர் சபையின் தலைவர் என்.ஏ.ஜயரட்ன மற்றும் அங்கத்தவர்கள் இச்செயலை முளுமையாக கண்டனத்துக்குள்ளாக்கினர்.
காலம் சென்ற இந்திரரத்ன தேரர் இந்த விகாரைப்பகுதியில் கடந்த 11 வருடங்கள் வசித்திருப்பதால் இவரின் இறிதிக்கிரிகைகள் இங்கே நடாத்துவதென்று பிரதம மதகுருவாலும் அந்த சபையாலும் முடிவுசெய்யப்பட்டதாக மொறதொட்ட றாகுல தேரர் தெரிவித்தார்.
மேலும், பல இயக்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் நடந்துகொன்ட விதம் மிகவும் வெட்கக்கேடானது எனவும் குறிப்பிட்டார். அவர்களுடைய இடத்தில் இறுதிக்கிரியைநடாத்தி அவர்கள் பெயர் வாங்குவதற்கே முனைந்தார்கள். காலம்சென்ற இந்திரரத்ன தேரர் அமைச்சரின் தேர்தல்களில் உதவியதால் அமைச்சருக்கு மிகவும் நெருங்கியவராவார். கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த பிக்குகள் இதனை அறிந்திருக்கவில்லை. அவர்கள் பொலீஸ் பாதுகாப்பிலே இரத்தினபுரிக்கு வந்தார்கள். இன்னுமொரு அமைப்பு அவருடைய பிரேததை திருட்டுத்தனமாக எடுக்க முயன்றது. பொறோன பகுதியின் சாதாரன அப்பாவி மக்கள் இறுதிக்கிரிகைகள் அவர்களுடைய பகுதியிலேயே நடாத்தவேன்டும் என்றனர்,
அமைச்சருடைய உரையை தடுக்கமுயன்றவர்கள் வெளிப்பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள். அரச கெளரவம் கொடுக்கப்படவில்லை என சில அழுத்திக்கூறினார்கள். இதில் உண்மையில்லை. அவருடைய பிரேதம் கண்டியிலிருந்து கொழும்புக்கு எடுத்துசெல்ல ஜனாதிபதியே ஹெலிகொப்டரை வழங்கினார் என்றும் அவர் கூறினார்.
Post a Comment