Header Ads



பங்காளாதேஷ் பிரதமருக்கு பேஸ்புக் மூலம் அச்சுறுத்தல் விடுத்த பேராசிரியருக்கு சிறை

பங்காளாதேஷ் பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகித்து வருகிறார். ‘பேஸ்புக்’ இணையதளத்தில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. 

இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பங்காளாதேஷ் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் ஹபிஷூர் ரஹ்மான் (28) என்பவரை கைது செய்தனர். 

இவர் மீது மெட்ரோ பாலிட்டன் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு இவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

No comments

Powered by Blogger.