முஸ்லிம் பெண்களின் மகிமை உணர்த்தும் கட்டுரைக்கு பதில் எழுதிய முஸம்மில்..!
கடந்த 23ம் திகதி 'லங்காதீப்ப' சிங்களப் பத்திரிகையில் பிரசுரமான 'மொகமட் ஆஸிக்' எழுதிய முஸ்லிம் பெண்களது உடை பற்றிய ஆக்கத்திற்கு பதில் அளிக்க தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகமட் முஸம்மில் எழுதிய ஆக்கம் 30-06-2013 திகதி 'லங்காதீப' பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அவ் ஆக்கத்தின் தமிழ் வடிவம் 30-06-2013 www.jaffnamuslim.com இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அவ் ஆக்கத்திற்கு ஆதாரமாக அமைத்த சிங்கள ஆக்கத்தின் தமிழ் வடிவை இத்துடன் தருகிறோம்.
(மூலம் மொகமட் ஆஸிக். தமிழில்; ஜே.எம்.ஹாபீஸ்)
எமது நாட்டு முஸ்லிம் பெண்களின் உடை தொடர்பாக சில மாதங்களுக்கு முன் பேசப்பட்ட விடயம் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. உலகில் பவ பாகங்களையும் சேர்ந்த முஸ்லிம் பெண்களின் உடைகள் பொதுவாக ஒத்த தன்மை கொண்டன. இருப்பினும் அதன் அலங்கார வேலைப் பாடுகள் மட்டும் நாட்டிற்கு நாடு வேறு படுகிறது.
இஸ்லாமிய சமயம் தோற்றம் பெற்று 1450 வருடங்களாகின்றன. இருப்பினும் உலகில் மனித சஞ்சாரம் பல இலட்சக் கணக்கான வருடங்களுக்கு மேல் முன்னோக்கியுள்ளது. அவ்வப்போதைய காலப் பகுதிகளுக்கு ஏற்றவாறு மனித உடைகளின் அமைப்பும் மாறியுள்ளமை பற்றி வரலாற்று ரீதியில் அறிந்து கொள்ள முடியும்.
உலகிலுள்ள உயிரினங்களை இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்க முடியும். அதில் (இரு கால் மற்றும் நான்குகால் உயிர்கள்) ஜீவராசிகளை மனிதன் என்றும் விலங்குகள் என்றும் பிரிக்க முடியும். இதில் விலங்குகளுக்கு தமது உடலை மறைக்க இயற்கையாகவே மயிர்களால் முற்றாக போர்த்தப்ட்ட போர்வை போன்ற தோல் உண்டு.
இன்னும் சில விலங்குகளுக்கு உடல் நிறம் மாறுவது போல் பல்வேறு காரணிகளால் உடல் வெப்பம் பாதுகாக்கப் படுகிறது. சில மிருகங்களுக்கு மாறும் உடல் வெப்ப நிலை உண்டு. இருப்பினும் மனிதனுக்கு அவ்வாறான இயற்கைப் பாதுகாப்பு நிலையாக இல்லை. இதன் காரணமாக காலத்திற்குக் காலம் பிராந்திய ரீதியாக உடைகளை நிர்மாணிக்கும் செயற்பாடு உருவானது. (வெப்பம் குளிர் முதலான இயற்கைக் காரணிகளால் உடலைப் பாதுகாப்பதற்கு) இவ்வாறு மனிதர்கள் தமக்குப் பொருத்தமான உடைகளை அமைத்துக் கொண்டனர். (உதாரணமாக துருவப் பிரதேச எஸ்கிமோவரின் உடை மத்திய கிழக்கிற்கு ஒத்துவராது)
கற்குகையில் வாழ்ந்த ஆதிவாசிகள் தமக்குத் தேவையான உடைகளை மர இலைகளையும் மிருகங்களின் தோலையும் கொண்டு அமைத்துக் கொண்டனர் என சரித்திர ரீதியாக நாம் படித்துள்ளோம். சால்ஸ் டாவினின் கூர்புக் கொள்ளையின் படி பொதுவாக இது விபரிக்கப்பட்டாலும் சால்ஸ் டாவினின் கூர்புக் கொள்ளையை மதசார்புவாதிகள் நிராகரிக்கின்றனர். காரணம் குரங்கில் இருந்து மனிதன் தோன்றி இருப்பின் கோடான கோடிக் காலத்தில் எப்போதாவது குரங்கு ஒன்றிற்கு மனிதன் அல்லது மனிதனுக்கு குரங்கோ பிறந்தது கிடையாது. அப்படி மாறியதும் கிடையாது. இதனால் மேற்படி கொள்ளையை பலர் நிராகரிக்கின்றனர்.
இலங்கைப் பெண்களது உடை தொடர்பாக கடந்த நூறு வருட காலத்தை எடுத்துப் பார்க்கும் போது முஸ்லிம் பெண்களிடம்; மட்டுமல்லாமல் சகல தரப்பினரிடமும் பல்வேறு மாறுதல்களை அவதானிக்கலாம். இலங்கையில் சிங்கள மக்களுக்கு மத்தியில், மேலை நாட்டுப் பெண்களது (உடரட்ட) உடைக்கும், கீழ் நாட்டுப் பெண்களின் உடைக்கும் (பாத்தரட்ட) இடையில் வேறுபாட்டைக் காண்கிறோம். அதேபோல் 100 வருடங்களுக்கு முன்பு நாம் காணாத டெனிம் மற்றும் ரீசேட் அணிந்த பெண்களை இன்று பரவலாகக் காண்கிறோம். கடந்தகாலங்களில் இலங்கைப் பெண்களது உடை பற்றிய விடயங்களைத் தேடிப் பார்க்கையில் வரவர உடலை மறைக்கும் அளவு குறைந்து கொண்டு போகும் வரலாற்றையே காணமுடிகிறது.
இந்த வரையறையிலிருந்தே முஸ்லிம் பெண்களது உடை பற்றிய விடயத்தை நாம் ஆய்வுக்கு உற் படுத்த வேண்டியுள்ளது. எமது நாட்டில் மட்டுமன்றி உலகில் அனைத்து நாடுகளிலும் முஸ்லிம் பெண்களது உடையில் ஒரு சமச் சீர்த்தன்மையை காணமுடியும். அது இஸ்லாமிய சமயம் கூறியதற்கு அமைவாக உருவாக்கப்பட்டவையாகும்.
இஸ்லாம் சமயம் குறிப்பிடும் விதம் பற்றிப் பார்த்தால் முஸ்லிம் பெண்களது உடல் முழுவதும் மறைக்கப்படவேண்டும் என்பதைக் (அவ்ரத்) காணலாம். அது இப்படித்தான் என்று வரைபடம் மூலம் காட்டப்படவில்லை. இருப்பினும் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கட்டாயம் மறைக்கப்பட வேண்டும். இதில் கருத்து வேறு பாடு இல்லை. ஆனால் உலகில் பல பாகங்களிலும் பல்வேறு முறைகளைப் பின்பற்றுகின்றனர். இதில் முக்கிய இடம் வகிப்பது கருப்பு நிறத்திலான முழு உடலும் மறைக்கப்பட்ட ஒருவகை ஆடையாகும். இலங்கையில் அதிக பெண்கள் இதையொத்த விதத்திலேயே உடை அணிகின்றனர். இதன்படி பெண்களின் முகம் மற்றும் மணிக்கட்டுக்கை தவிர்ந்த பகுதிகள் அனைத்தும் மறைக்கப் படுகிறது.
முஸ்லிம் பெண்கள் அணியும் இந்த ஆடை முஸ்லிம்களுக்கு மட்டும் எல்லைப் படுத்தப்பட்டதல்ல. இஸ்லாம் தோன்று வதற்கு 500 வருடங்கள் முற்பட்ட கிறிஸ்தவ பெண்களது (கன்னியாஸ்திரிகளது) உடையும் பெறுமளவு இதற்கு சமசமானதாகும். நீண்டகாலமாகப் பொதுவாக பெண்களது உடையில் ஏற்பட்டதாக்கம் முஸ்லிம் பெண்களது உடையிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
முஸ்லிம் பெண்கள் அணியும் கருப்பு நிறத்தினாலான இந்த உடுப்பு கட்டாயம் கருப்பில் இருக்கவேண்டும் என்பதல்ல. ஆனால் அது அவர்களுக்கு மிகவும் சௌகரியம் எனக் கூறுகின்றனர். பாதுகாப்பானது என்றும் கூறுகின்றனர். பெண்கள் ஆண்கள் முன் தோன்றும் போது இயல்பாக ஏற்படுகின்ற கவர்ச்சி குறைவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். வர்ணஜாலங்களால் மின்னுவதை விட இது ஒளி புகாதன்மை காரணமாக தமது அவயவங்களை வெளிக் காட்டும் தன்மை குறைவு என்கின்றனர். அத்துடன் பஸ்ஸில் பிரயானம் செய்யும் போது நின்று கொண்டு சென்றாலும் அல்லது ஏறும் போது இறங்கும் போது தமக்கு அது மிக இலகுவாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இருப்பினும் அண்மைகாலமாகப் பெண்களது உடை விடயமாக இலங்கையில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதிலும் புர்கா என்றழைக்கப் படும் உடை பற்றிய (முகத்தை முற்றாக மூடுதல்) விமரிசனம் மிக அதிகம். இந்த உடைக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் கூறும் குற்றச்சாட்டு என்னவென்றல் இவ்வாறு உடையணிந்து ஆண்கள் குற்றச் செயலில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கின்றனர். இஸ்லாமிய சமயத்தின் அடிப்படையில் பெண்களுக்கான உடை பற்றிய முறையொன்று பின் பற்றப் படுகிறது. இதுமுஸ்லிம் பெண்களுக்கு மட்டுமல்ல. சகல பெண்களுக்குமானதாகும். அதாவது பெண்களது மூடப்படவேண்டிய அனைத்து உறுப்புக்களும் மறைக்கப்பட்ட உடையாகும். இவை அனைத்தையும் கவனத்திற் கொண்டு அவர்கள் இந்த பர்தா அமைப்பிலான உடையை தெரிவு செய்துள்ளனர். இதில் கருப்பு நிறம் என்பது ஏகோபித்த தீர்மானம் அல்ல.
மார்கம் தொடர்பாக அதிக சிரத்தை கொள்வோர் தத்தமது பேணுதலுக்காக சில பெண்கள் இதில் புர்கா என்றழைக்கப் படும் முகம் கை உற்பட அனைத்து பாகங்களையும் மறைக்கும் உடையை அவ்வாறு பயன் படுத்துகின்றனர். இது ஒரு பெண்ணைப் பொறுத்தவரை அதிக பட்ச உச்சமாக மறைக்கக் கூடிய உடையாகும். அவர்களது உடம்பில் 99.99 சதவீதம் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படி உடை அணிபவர்களைப் பார்த்து சிலர் கோணி பில்லா (முகமூடிப்பேய்) என்று பரிகசிக்கின்றனர். முஸ்லிம் சிங்கள, தமிழ் என்ற எந்த இன சகோதரியாக இருந்தாலும் பரவாய் இல்லை. தமது உடை உடலை மறைக்கும் வீதம் கூடுதலாக இருக்கவேண்டுமா? அல்லது குறைவாக இருக்கவேண்டுமா? என்பதை சிந்திக்கத் தூண்டும் ஒரு ஆக்கமாக இதனை நான் கருதுகிறேன்.
இன்றைக்கு மத வெறியர்கள் பர்தாவை கழட்டிகொன்டு போக சொன்னால் நீங்களும்கழட்டிகொன்டு போக சொல்ரீங்க, நாளைக்கு வேர எதையும் கழட்டிகொன்டு பேக சொன்னா அதையும் கழட்டிகொண்டு போகவா சொல்லுவிங்க???
ReplyDeleteஉங்களுக்கு முதுகில் சீவன் இல்லை என்றால் நீங்கள் உங்களது சாரத்தை கழட்டி கொண்டு போங்க. உங்களுக்கு தலைக்கு மேலதான் ஒன்றும் இல்லை என்றால் தலைகுள்ளுகுமா ஒன்றும் இல்லை?
இந்த தலைப்பு மயக்கமாக உள்ளது ," முஸம்மிலின் புர்கா விமர்சனக் கட்டுரைக்கு ஆதாரமமாக அமைந்த சிங்களக் கட்டுரையின் தமிழ் வடிவம் " என்று அமைந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
ReplyDeleteJaffna Muslim please avoid this Janaka Thera Musammil News, or Change His name and as Janaka thera Musammil then publish,
ReplyDeleteஇஸ்லாமிய அடிப்படை அறிவே அற்றவர் முஸம்மில் !
ReplyDeleteஇஸ்லாம் தோன்றி 450 வருடங்கள் அல்ல அது முஹம்மத் நபி (ஸல்)அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டே 450 வருடங்கள் .
நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் எத்தனையோ ஆயிரக்கணக்கான நபி மார்கள் இஸ்லாத்தை போதித்திருக்கிறார்கள் அதில்தான் 25 நபி மார்களின் பெயர்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது .
ஆதம் அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் பூமிக்கு வந்ததில் இருந்தே பூமியில் இஸ்லாம் தோன்றிவிட்டது .
ஜம்மியத்துல் உலமா சபை இந்த முஸம்மிலின் செயர்ட்பாடுகலை கவனித்து , உண்மையிலேயே இஸ்லாமிய பற்று உள்ளவரா என்றும் , இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக செயற்படுதுபவரா , இஸ்லாத்தை நேசிப்பவரா போன்ற அணைத்து செயற்பாடுகளையும் ஆராய்ந்து உங்களது பத்வாவை வெளியிட வேண்டும் .
ஏன்னென்றால் எமது நாட்டில் எத்தனையோ முனாபிக்குகள் முஸ்லிம்களை போன்று வேடம் தரித்து முஸ்லிம்களின் கலாச்சாரத்தை
சீரழிப்பதற்காக முயற்சிக்கிறார்கள் , பேரினவாதிகளின் கூலிகளாகவும் செயற்படுகிறார்கள்
இவன் என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறானா....?? முளுமையான முனாபிக் தனத்தில் தான் இருப்பதை மேலும் மேலும் நிரூபித்திக்கொண்டே இருக்கிறான்..
ReplyDeleteஜம்இய்யதுல் உலமா என்ன கவனம் செலுத்துவது.?
ReplyDeleteஅவர்களே 'வட்டிப் பணத்தில் வாகனம் வாங்கலாம்' என்று காத்தான்குடி நகர சபைத் தவிசாளருக்கு 'பத்வா' கொடுத்திருக்கிறார்களாம்!
கடந்த 27.06.2013ல் நடைபெற்ற காத்தான்குடி நகர சபையின் 42வது அமர்வில் சர்வாதிகாரமுள்ள தவிசாளர் இதனை பகிரங்கமாகச் சொல்லி ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
our kind request JAMAITUL ULLAMA will you p[lease give fatuwa to this this man as muslim born kafeer,,, because we are really about this man. plese distance him from our muslim coomunnity
ReplyDeletehe is sambirathaya muslim.this man like naked life.he can but he cant force to do same on muslim.may he is munafique or murthath.leave to allah brothers allah enough him to judge
ReplyDelete