கட்சியின் சட்டதிட்டத்தை யார் மீறினாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது - ரவூப் ஹக்கீம்
(J.M.Hafees
and Mohamed Asik)
அரசிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறவேண்டுமென சிலர் நினைப்பது கோவணத்தைக் கழற்றி தலைப்பாகை சுற்றுவது போன்ற ஒரு செயலாகும் என்று நீதி அமைச்சர் றவூப் ஹகீம் தெரிவித்தார்.
(30.6.213) இன்று கண்டியில் நடந்த கூட்டமொன்றிவ் அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது,
ஒருவருக்கு தலையை மூடவும் வேண்டும். அதே நேரம் இருக்கும் சிறிய துணியைக் கொண்டு தனது மானத்தையும் பாதுகாக்கவும் வேண்டும். அப்படியான சந்தர்ப்பங்களில் அவர் தனது கோவணத்தை கலற்றி தலைப்பாகை அணிய மாட்டார். அதுபோல சொற்ப அங்கத்தவர்களையாவது நாம் பாது காத்துக் கொள்ளவேண்டுமே ஒழிய வேறொன்றை மறைப்தற்கு அதனைப் பயன் படுத்த முடியாது. மானம் மிகமுக்கியம். இதுபோல எமது கட்சிக்கும் சமூகத்திற்கும் எது முக்கியமோ அதனைத்தான் நாம் செய்யவேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றி தமது கபட நாடகத்தை அரங்கேற்ற பலர் காத்து நிற்கின்றனர். சில பேரினவாத சக்திகள் எம்மை இரண்டாகக் கூறுபோட திட்டமிட்டுள்ளனர். அப்படியான பேரினவாத சக்திகளுக்கு தீணிபோடும் வேலையை நாம் செய்ய முடியாது.
நான் அமைச்சரவையில் பேசுவதை பொதுக் கூட்டத்தில் பேச முடியாது. எனக்கென்று ஒரு கூட்டுப் பொறுப்பு உண்டு. அதனை நான் பாதுகாக்க வேண்டும். எனவே பேச வேண்டிய இடத்தில் நான் பேசுவேன்.அதற்காக வலியப்போய் வம்பைத் தேடிக் கொள்ளத் தேவையில்லை.
முஸ்லிம் நாடுகளின் ஒன்றியத்தின் தூதுவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒரு சிலர் ஏதோ உளரிய போதும் நான் மௌனியாக இருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். நான் முன்யோசனை இன்றி எதனையோ பேசி எனது நாட்டையும் இனத்தையும் காட்டிக் கொடுக்க முடியாது. அங்கு நடந்தவற்றை அதில் கலந்து கொண்ட தூதுவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
நான் ஜனாதிபதிக்கு இராஜதந்திரத்தை சொல்லிக் கொடுக்கவேண்டுமென சிலர் நினைக்கின்றனர். அவருக்கு அது எல்லாம் தெரியும். இந்த நாட்டு முஸ்லிம்கள் எமது பிரஜைகள். அவர்களுக்கு ஏதும் தீங்கு ஏற்பட்டால் அதனை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என்று அன்று முஸ்லிம் நாடுகளின் ஒன்றியத்தின் தூதுவர்கள் முன் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு யாப்பு உண்டு சட்டதிட்டம் உண்டு. அதனை யாரும் மீறினால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நடவடிக்கை எடுப்பது கட்சித் தலைமையின் பொறுப்பு என்றார்.
நீங்கள் வெளியேறினால் சில்லறை அரசியல் வியாபாரி பஷீர் தலைமையில் அடுத்த அணி கூட்டிக் கொடுக்கும் .
ReplyDeleteமானமுள்ளவனுக்குத்தான் கோவணமும் தேவை. அதில்லாதவர்களுக்கு கோவணம் என்ன கோதாரிக்கு?
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
எதையாவது நல்லதை செய்யுங்கள் தலைவர்களே!அரசியல்வாதிகளே!!!!!
ReplyDeleteமுஸ்லிம்கள் ஈமான் கொண்டவர்கள் என்பதற்கு அல்லாஹ்வையும் மரணத்தையும் இறுதி நாளையும் நாம் ஒவ்வொருவரும் நம்பியுள்ளோம் என்பதற்குச்சான்று பகரும் வழியில் நமக்குட்பட்டவைகளுக்கும் நாம் பொறுப்பில் எடுத்தவைகளுக்கும் கணக்கு காட்டியே தீரவேண்டும் இது உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கின்றதா என்று நீங்க்ளே ஒரு கணம் சிந்தித்துச்செயல்படுங்கள். நீங்கள் போகும் இடங்களுக்கு நீங்களே நல்லவைகளைத்தேடிக்கொள்ளுங்கள்.
சார் நீங்கள் முஸ்லிம் காங்கிரசின் மானம் என்ன..? தலை என்ன...? என்பதை கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்..? அடுத்தது இந்த கோவணம் தான் என்ன..? என்பதையும் கூறுங்கள்.
ReplyDeleteசார் தயவு செய்து இந்த மகிந்த ராஜபக்ச வை கதைக்காதிங்கோ..! என்றும் இல்லாதவாறு முஸ்லிம்களுக்கு வித்தியாசமான அமைப்புக்களில் மிகவும் நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். இதை புரிந்து கொள்வதற்கு உங்களின் சுயநலம் தடுக்குமாயின் நிட்சயமாக அது இந்த சமூகத்துக்கு செய்த துரோகமாக தான் இருக்கும்.
exactry, agree with you. Also dont forget your first duty..is send Basheer Segudawood Home soon.orelse community will be in trouble
ReplyDeletewadamahna therthalil thaniththu poottiyiduvath ungal sonthamudivu enkiraare baseer! koottupporuppai meeriya ungalai yaaraikkondu visaranai nadaththalaan? seyalaalar naayahaththai kondu visaarippama? hihh....hihh...hihihiheeeeeeeeeeeeeeeeeee.
ReplyDeleteKovanam Eanbatu Amajsu Pathaviya sear
ReplyDeleteஉங்களது வாய்ப்பேச்சில் இதிலாவது துணிவுள்ளதா?என்பதை பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.
ReplyDelete