பௌத்த தேரர்களுக்கு தானமாக வழங்கும் தரத்தை உறுத்திப்படுத்த ஜனாதிபதி பணிப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று 01-06-2013 கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பின்னர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்திரக்கித்த தேரரை சந்தித்து ஜனாதிபதி ஆசிபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே மகா சங்கத்தினருக்கு தானமாக வழங்கப்படுகின்ற பொருட்கள் மற்றும் பூஜைப் பொருட்களின் தரத்தை உறுத்திப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று காலை அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் பூஜைபொருட்களின் தரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். தானமாக வழங்கப்படுகின்ற பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகள் உரிய நடைமுறைக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். Nf
Branded Liquor should be included not locally produced. Beef Stake should be high qulaity....
ReplyDelete