Header Ads



இளம் கண்டுபிடிப்பாளருக்கான விருது - தங்கப்பதக்கம் பெற்று முஸ்லிம் மாணவன் சாதனை


மாவனல்லையில் அமைந்துள்ள Good Hope முஸ்லிம் சர்வதேசப் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் முஹம்மந் ரீஸா ரிஸ்வி கரீம் என்ற மாணவன் அறிவியல் முன்னேற்றத்திற்கான இலங்கை சங்கம் Sri Lanka Association for the Advancement of Science (SLAAS)  இனால் நடாத்தப்பபட்ட 2013ஆம் ஆண்டிற்கான இளம் கண்டுபிடிப்பாளரை தெரிவு செய்வதற்கான தேசிய மட்டத்திலான போட்டியில் பதக்கம் வென்று Mawanella Good Hope International College இற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் நடைபெற்ற மேற்படிப் போட்டியில் M. ரீஸா என்ற மாணவன் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சிறியவகையான நீர்மூழ்கிக்கப்பல் ((9(9(submarine) ஒன்றினை கண்டுபிடித்திருந்தார்.

       இவை தவிர மேற்படி மாணவனின் கண்டுபிடிப்பானது இலங்கை கல்வி அமைச்சு மற்றும் இலங்கை கண்டுபிடிப்பாளர் ஆணைக்குழு Sri Lanka Inventors Commission (SLIC) ஆகியற்றினால் முறையே கடந்த  மாதம் 11ஆம் திகதி பாடசாலை மட்டங்களில் நடைபெற்ற மாவட்டப் போட்டியிலும் 21ஆம் திகதி ஏஹலியகொட தேசிய பாடசாலையிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாகாணப் போட்டிகளிலும் முன்னிலை பெற்று இவ்வருடம் நவம்பர் 31ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 01 ஆம் 02ஆம் திகதி வரையான நாட்களில் கொழும்பு BMICH மண்டபத்தில் நடைபெற உள்ள தேசிய மட்டத்திலான கண்காட்சி மற்றும் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளார்.

தேசிய மட்ட பாடசாலை களுக்கு மத்தியில் நடைபெற்ற மேற்படி இளம் கண்டபிடிப்பாளர்களுக்கான போட்டியில் கலந்து கொண்ட ஒரே ஒரு சர்வதேசப் பாடசாலை மாவனல்லை குட்ஹோப் சர்வதேசப் பாடசாலை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

5 comments:

  1. வாழ்த்துக்கள்!

    இலங்கையில் முஸ்லிம் சமூகம் கல்வியிலும், (விஞ்)ஞானத்திலும் மென்மேலும் முன்னேற்றமடைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ்- காத்தான்குடி-

    ReplyDelete
  2. இது போன்ற புத்தி சாலிகளே நமது சமூகத்தின் குறிக்கோளாக இருக்கவேண்டும், அண்மையில் மொறட்டுவை பல்கலை கழகத்தில் பதுளை சேர்ந்த நமது ஒருமாணவனின் தலைமையில் ஆள் இல்லா விமானம் அறிமுகம் செய்யப்பட்டது இன்று நீருக்கு அடியில் செல்லும் நீர் மூழ்கி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது அல்ஹம்து லில்லாஹ், எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் இதனை முன்மாதிரியாக கொண்டு மேலும் பல கண்டுபிடிப்புக்கள் வர பிரார்த்தனை புரிவோம்.

    ReplyDelete
  3. இலங்கை முஸ்லிம்களும் தேசத்தின் நலனில் பங்களிப்பு செய்வதற்கு கல்வி, கலாச்சாரம், விளையாட்டு போன்று பல்வேறுபட்ட துறைகளிலும் தமது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும். மாவனல்லை குண்ஹோப் சர்வதேச பாடசாலையினைச் சேர்ந்த ரீஸா என்ற மாணவனின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைய வல்ல அல்லாஹ்வை பிறார்திப்போம்.

    ReplyDelete
  4. Dear student reesa! congratulations. I pray Allah for your all succses.

    ReplyDelete

Powered by Blogger.