Header Ads



யாழ்ப்பாணத்தில் கட்டிடம் கட்டுவதற்கு ஒரே நாளில் அனுமதி

(farook sihan)

யாழ். மாநகர சபை எல்லைக்குள் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி .தற்போது ஒரு நாளில் அனுமதி வழங்கப்படுகின்றது என சபையின் ஆணையாளர் செ. பிரணவநாதன் தெரிவித்தார். யாழ். மாநகர சபையின் மாதாந்த கூட்டம் (27.6.2013). வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது . அனுமதியற்ற கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என குற்றச்சாட்டினை  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்தனர் இதனையடுத்தே ஆணையாளர் மேற்படி தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

கட்டிடங்கள் கட்ட. மாநகர சபை முன்பெல்லாம் 4 மாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. தற்போது ஒரு நாளில் அனுமதி வழங்கப்படுகின்றது இலங்கையில் எந்தவொரு சபையினாலும் வழங்கப்படுவதில்லை. அவ்வாறு இருந்தும் யாழ். மாவட்டத்தில் அனுமதியற்ற கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில் 450 இடங்களில் கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டிட உரிமையாளர்களுக்கு  எச்சரிக்கை கடிதம் (சிவப்பு நோட்டீஸ்) வழங்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையினால் தற்போது இந்தவொரு நடவடிக்கை மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்றார்.

No comments

Powered by Blogger.