கண்டுபிடிக்கப்பட்டார்
(எஸ்.அன்சப் இலாஹி)
அக்கரைப்பற்று -05, இல- 221/1, ஜின்னா வீதியில் வசிக்கும் ஆதம்லெவ்வை ஜெஸ்லி; காணாமற் போனமை தொடர்பாக ஜப்னா முஸ்லிம் இணைய செய்தித் தளத்தில் கடந்த வாரம் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்ததை வாசகர்கள் அறிவீர்கள்.
இச் செய்தியின் பலனால் காணாமல் போன ஆதம்லெவ்வை ஜெஸ்லி கடந்த ஒரு வாரகாலமாக தனது ஊருக்கு திரும்ப வழி தெரியாமல் காலி பஸ் தரிப்பிடத்தில் இருந்துள்ளார். ஜப்னா முஸ்லிம் செய்தியை பார்த்த வாசகர்கள் இவரை அடையாளம் கண்டு இவரின் குடும்பத்தாருக்கு அறியப்படுத்தியதன் மூலமாக நேற்று செவ்வாய்க்கிழமை சகோதரர்கள் சென்று கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
எனவே காணமல் போனவர் கிடைப்பதற்கு உதவி செய்த ஜப்னா முஸ்லிம் இணைய செய்தி நிறுவனத்திற்கு குடும்பத்தார் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறார்கள்
Post a Comment