காலி காரப்பிட்டியவில் முஸ்லிம்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு தடை
காலி காரப்பிட்டிய வைத்தியசாலைக்கு எதிரில் உள்ள காணிகளை கைப்பற்றுவதை தடுத்து நிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
பொது நடவடிக்கை ஒன்றுக்காக இந்த காணிகளை கையகப்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை தொடர்பாக மனுவொன்று அங்கு வசிக்கும் மக்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணைகள் நீதியரசர்கள் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் மாலனி குணரட்ன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதியரசர்கள் இந்த தடையுத்தரவை பிறப்பித்தனர்
காலி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், நகர அபிவிருத்தி அதிகாரச்பை ஆகிய தரப்பினர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
பொது நடவடிக்கை எனக் கூறி, அரசாங்கம் தமது காணிகளை கையககப்படுத்த முயற்சித்து வருவதாக மனுதார்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த காணி எப்படியான பொது நடவடிக்கைக்காக கையகப்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை எனவும் மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
காலி கராப்பிட்டி வைத்தியசாலைக்கு எதிரில் உள்ள 32 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புகளை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகாரச் சபை உத்தரவிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. gtn
Ultimately, Our lawyers did some things, for our voiceless innocents.
ReplyDelete