மருதமுனையில் முஅத்தீன், பள்ளிவாயல் சேவையாளர்களுக்கான செயலமர்வு
(ஜெஸ்மி எம்.மூஸா)
செஸ்டோ சிறிலங்கா அமைப்பின் சமய கலாசார பேரவையின் ஏற்பாட்டில் முஅத்தீன் மற்றும் பள்ளிவாயல் சேவையாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வொன்று 23-06-2013 மருதமுனை மத்திய பள்ளிவாயலில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் எம்.எம்.முஸ்னி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் ஏ.ஜே.எம். வஸீல் இறைபணி பற்றிய சமகால சமூக நோக்கும் உளவியல் விளக்கமும், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் அஸ்ஸெய்க் ரம்ஸான் இறை பணி வரலாறும் அதன் மகத்துவமும் , அட்டாளைச் சேனை கல்விக் கல்லூரி விரிவுரையாளர் அஸ்ஸெய்க் அன்ஸார் மௌலானா இறை பணியாளர்களின் பொறுப்புக்களும் சமூக கடமைகளும் , பொதுச் சுகாதார பரிசோதகர் பைசல் முஸ்தபா பள்ளிவாயல்களின் அக புற சுத்தமும் திண்மக்கழிவு முகாமையும் , உம்முல் குரா முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ ஹுஸைனுத்தின் சரியான உச்சரிப்புடன் அதான் கூறுவோம், மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரி அதிபர் எம்.எல். முபாரக் மதனி இறை பணியாளர்களை தொழில்வாண்மையுடையவர்களாக மாற்றுதல், சமாதான கற்கை நிலைய பணிப்பாளர் டாக்டர் ரியாஸ் கருத்துப் பரிமாற்றம் ஆகிய தலைப்புக்களில் உரைகள் இடம் பெற்றன.
கலந்து கொண்டவர்களுக்கான ஊக்குவிப்புப் பணம் மற்றும் சான்றிதழ்களும் இதன் பொது வழங்கப்பட்டன.
Post a Comment