Header Ads



பொது பலசேனாவை கண்டு முஸ்லிம்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது - பொலிஸ் அதிகாரி

(எ எம் எம் முஸம்மில்)

பதுளையில் 2013/06/15ந் திகதி நடைபெறவுள்ள பொது பல சேனாவின் பொதுக்கூட்டம் சம்பந்தமாக பதுளை முஸ்லிம்களின் நிலைமைகள் குறித்து மேற்கொள்ளப்படவேண்டிய ஒழுங்குகள் சம்பந்தமாக  பதுளை ஜும்மா பள்ளி நிர்வாகத்தால் 2013/06/14 ந் திகதி ஜூம்மவிற்கு பின் ஏற்பாடு செய்யப்பட கூட்டத்தில் உரை நிகழ்த்திய பதுளை பொலிஸ் நிலைய ஏ எஸ் பி ஈ பி திலகரத்னா, 

“பொது பல சேனாவினர் தீவிரவாதிகள் அல்ல. நான் அவர்களுடனும் இதுபற்றி கதைத்துள்ளேன். அவர்கள் சமூக ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படாது என்று உறுதியளித்துள்ளார்கள். தீவிரவாத கொள்கையுடையவர்கள் எல்லா சமூகங்களிலும் உள்ளனர், ஆனால் அவர்கள் மிகச்சிலரே. ஆனால் அவர்களுக்கு சமூக ஒற்றுமையை சீர்குலைக்க நாங்கள் விடமாட்டோம்.   பதுளை முஸ்லிம்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள பயமானது , ஒருவன் பாம்பு புற்றை கண்ட பயமே.!  பாம்பு புற்றை கண்டதும் சிலருக்கு பயம் வந்து விடும் , அதில் பாம்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் பயந்து விடுவார்கள் , அதற்கு சிங்களத்தில் சொல்வார்கள், “ஹும்பஸ் பய” என்று,  நாளைய கூட்டம்  அவர்கள் அவர்களின் பாட்டில் செய்வார்கள். நீங்கள் உங்கள் வேலைகளை செய்துகொண்டு போங்கள், பாதுகாப்பு விடயமாக நாங்கள் கவனித்து கொளவோம்.

ஆனால் நான் இவ்விடத்தில் உங்களிடத்தில் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன். அதாவது நாளை இறைச்சி கடைகளை  மூடிவையுங்கள். அது தவிர ஏனைய விடயங்கள் வழமைபோல நடைபெறலாம்”. என்றும் தெரிவித்தார். குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் தூண்டிவிடுபவர்கள் பற்றி இந்த சமூகத்திலிருந்து எவரையாவது நீங்கள் கண்டால் உடனடியாக எங்களுக்கு அறிவித்து விடுங்கள் ,அவர் விடயத்தில் நாங்கள் கவனித்து கொள்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  
   
பிற்குறிப்பு :- 
முஸ்லிம்களின் மோசமான எதிரி முஸ்லிம்களே!
Dr. பால் க்ரைக் ராபர்ட்ஸ்
Dr. Paul Craig Roberts
கட்டுரையாளர், டாக்டர் பவுல் கிரேக் ராபட்ஸ் அவர்கள், அமெரிக்க கருவூலத்தின் (Treasury) முன்னாள் பிரதிச் செயலர், ‘வால்ஸ்ட்ரீட்’ பத்திரிகையின் கூட்டு ஆசிரியர், ஹூவர் கலாசாலையிலே ஒரு ஆராய்ச்சியாளர், அரசியற் பொருளாதார விரிவுரையாளர்.
முஸ்லிம்களோ சனத்தொகையில் மிக அதிகம். ஆனால், அவர்களுக் கிடையேயான பிரிவினையோ அதைவிட அதிகம்
“தம்மை அடிமைப்படுத்த முயலும் ஏகாதிபத்தியத்தை வெறுப்பதைவிட , தம்மைத்தாமே வெறுத்துக்கொண்டும் தம்மைக்கண்டு தாமே பயந்துகொண்டும் இருக்கும்வரை முஸ்லிம்கள் தோற்றுக்கொண்டே இருப்பார்கள்!”  

5 comments:

  1. Muslimukku ethiri muslime enbathil maatru karuthtu kideyaathu.
    Muslimukku ethiraaha anniyavarhalidam thappum thavarumaaha veenaana poy avathuuruhaley mihavum shuulchi karamaaha paththirey halil vaanoliyil pool cid yil polisil janathipathiyidam enru pala tharappil buhaar koduththavarhal muslimgal thaan. Athan pirathi palan naam ellorum anupavikkiroom.

    ReplyDelete
  2. போலீஸ் சொல்கின்றது எதற்கும் பயப்பட வேண்டாம் ஆனால் அன்றைய தினம் மட்டும் !! !!!! இறைச்சி கடைகளை மட்டும் மூடி விடுங்கள் !!!!!!!!!! எப்படி எங்கள் நாட்டு போலீஸ் அவர்களுக்கே கட்டுப்படுத்த முடியாது இந்த BBS

    ReplyDelete
  3. Hi Friends,

    நம்ம பொலீஸ் பேச்சு இப்படிச் சொதப்பலாக இருக்கிறதே ? அதுசரி, இதைச்சொல்வது சீரியஸ் பொலீஸா இல்லை சிரிப்புப் பொலீஸா...?

    ReplyDelete
  4. கவனித்துக்கொள்வோம் கவனித்துக்கொள்வோம் என்று சொல்லும்போதே நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியதுதான் மேட்டர் அந்தப்பக்கம்தான் பச்சக்கொடி பற்க்கின்றது என்று. பிரார்த்தனைமூலம் வெற்றி பெறுவோம் எக்காரணம் கொண்டும் நமது ஈமான் பலஹீனமாகிவிடக்கூடாது.

    ReplyDelete
  5. EEMAAN .EEMAAN YENRU SILAR SOLLI SOLLI .MUSLIM KALAI KAI KALUVI VITTAARKAL.

    ReplyDelete

Powered by Blogger.