பழமைமிகு புனித அல்குர்ஆன் பிரதியை ஏலத்தில் விடுவதை தடுத்துநிறுத்த வேண்டுகோள்
(Tn) பாரிஸில் 19ஆம் நூற்றாண்டு குர்ஆனை ஏலத்தில் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எகிப்து இமாம் அகமது எல் தைய்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அல் அஸ்ஹர் பள்ளிவாசலில் கையால் எழுதப்பட்ட 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குர்ஆன் ஒன்று இருந்தது.
கெய்ரோ நகரை பிரான்ஸ் படைகள் தாக்கிய போது அதில் இருந்தும், தீயில் இருந்தும் அந்த குர்ஆன் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் அந்த குர்ஆன் மாயமானது. 1970 ஆம் ஆண்டுக்கு முன்பு அந்த குர்ஆன் எகிப்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஏல நிறுவனம் ஒன்றில் வரும் 9 ஆம் திகதி அந்த குர்ஆன் ஏலத்தில் விடப்படுகிறது. இந்த ஏலத்தை தடுத்து நிறுத்துமாறு எகிப்து இமாம் அகமது எல் தைய்ப் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது காமில் அலி அமர், யுனெஸ்கோ தலைவர் ஐரினா பொகோவா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த பழமை வாய்ந்த குர்ஆன் சட்டப்பூர்வமாகத் தான் எகிப்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஏலத்தை தடுத்து நிறுத்தி, குர்ஆனை மீட்கும் முயற்சியில் எகிப்து இறங்கியுள்ளது.
Hi Friends,
ReplyDeleteஒரு குறிப்பிட்ட மதத்துக்குரிய நூலாக இருந்தாலும் பழமைச் சின்னம் என்ற வகையிலே அது உலகமக்கள் அனைவருக்கும் உரியது.
இதே போலத்தான் எந்தவொரு மக்களுக்குரியதாயினும் புராதனச் சின்னங்கள் அனைத்தும் பாதுகாத்துப்போற்றப்பட வேண்டியவையே. ஏனெனினல் அவை தமது காலத்தின் வாழ்க்கையை பிரதிபலிப்பவை. எதிர்வரும் தலைமுறைகள் முன்னோரின் வரலாற்றை சரிவரத் தெரிந்து கொள்வதற்கு அவசியமானவை.
இன்று நாம் நமது ஆன்மீக நூலை ஏலம் விடுவதற்கே இத்தனை கவலைப்படுகின்றோமே ஆப்கானிஸ்தானிலே பாமியன் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டபோதும் இவ்வாறான கவலை கொண்டோமா என்று நேர்மையாக யோசித்துப் பாருங்கள். குற்றமுள்ள நெஞ்சுகளின் குறுகுறுப்பு காதுகள்வரை ஒலிக்கக் கேட்கலாம்.
you are right
ReplyDeleteethu pelai. namathu quran utherhalathu kaihaluku pohakudathu athanal ethai thaduthu neruthi namath porulai naam pathu haka vendum.
ReplyDelete