Header Ads



தவறுதலாக ஒலித்த சுனாமி எச்சரிக்கை - அச்சமடைந்த மக்கள்

தவறுதலாக ஒலித்த சுனாமி எச்சரிக்கை கோபுரத்தால் மக்கள் அச்சமடைந்த சம்பவம் உடப்பு, முந்தல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உடப்பு, முந்தல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை கேர்புரமானது இன்று காலை திடீரென இரண்டு தடவைகள் ஒலித்துள்ளது. 

இதனால், அப்பகுதியைசேர்ந்த மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளதுடன் இதுகுறித்து பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் புத்தளம் அனர்த்த முகாமைத்துவ தலைமை அதிகாரி ரனவீரவை தொடர்புகொண்டு கேட்டபோது, அது சுனாமி எச்சரிக்கை 
அல்லவென்றும் தொழில்நுட்பக்கோளாரே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

இக்கோபுரம் இன்று காலை 10.21 மணியாளவில் இரண்டடு தடவைகள் ஒலித்துள்ளது. Tm

2 comments:

  1. Hi Friends.

    தவறுதலாக ஒலித்தால் மன்னித்துவிடலாம்..

    ஆனால் தவறுதலாக ஒலிக்காமல் இருந்துவிட்டால்தான் மன்னிக்கவே முடியாது

    ReplyDelete
  2. அவர் வந்து சொல்லணுமாக்கும் அது தொழில் நுட்பக்கோளாறு என்று, சுனாமி வராம கத்தினா அது என்னெண்டு எங்களுக்கு தெரியாதா, என்னங்கடா இது எல்லாமே கொமடி பீசா போயிட்டே சாதாரணமான விடயமா இது?

    ReplyDelete

Powered by Blogger.