Header Ads



தூங்கிக்கொண்டிருந்த கருங்குழியை கண்டுபிடித்துள்ளார்களாம்..!

அண்டத்தில் 11 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள சிற்ப விண்மீன் கூட்டத்திற்குள் ஒரு கரும் பள்ளம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கரும்பள்ளம் அண்டவெளியில் சுற்றிவரும் குப்பைகளை விழுங்கி அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இங்கிருந்து மிக அதிவேகத்தில் நட்சத்திரங்கள் பிறந்து கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பால் வீதியில் கரும்பள்ளத்தின் செயல்பாடுகளும், நட்சத்திர உற்பத்தியும் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பது வானியல் ஆராய்ச்சியாளர்களை பெரிதும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. 

சிற்ப விண்மீன் திரளுக்குள் இருக்கும் இந்த கருங்குழியின் அளவானது நமது சூரியனை விட 5 மில்லியன் மடங்கு பெரிது என்று கூறப்படுகிறது. சந்திரா மற்றும் நஸ்டர் விண்கல ஆய்வகத்தில் பாதிவாகியுள்ள இந்த கருங்குழி மீண்டும் இன்னும் சில வருடங்களில் காணப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

2 comments:

  1. மூளைக்குப் படாத செய்திகளைச் சொல்லிச் சொல்லியே இந்த விஞ்ஞானிகளின் காலம் கழிகிறது. அதை நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது தானே. பரவாயில்லை.

    ReplyDelete
  2. zim zam,

    யாருடைய மூளைக்குப்படாத செய்தி என்பதையும் சொல்லிவிடுங்களேன்... Oh, உங்களைப்போலவேதான் எல்லோருக்கும் மூளை இருக்கும் என்று நினைக்கும் பெருந்தன்மை போல உங்களுக்கு!


    எங்கோ ஓர் ஆன்மீக நூலில், 'வானவர்கள் நெருப்புக்கைக்குட்டைகளை அசைத்து முகில்களை சேகரித்து திரட்டுவதனால் மின்னலும் தோன்றி மழையும் பெய்கின்றது' என்று அம்புலி மாமா கதை போல எழுதியிருப்பதை கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடும் நீங்கள், இலட்சக்கணக்கான ஆராய்ச்சிகளின் பின்பு துல்லியமாகக் கணித்துக் கூறப்படும் அறிவியல் உண்மைகளை ஏற்றுக்கொள்வதற்கு தயங்குகின்றீர்களென்றால் என்ன காரணம்?

    நான் யூகிப்பது சரியாக இருந்தால்...

    உங்களுக்கு அறிவியல் கண்டுபிடித்தல்கள் தொடர்பாக ஒருவித தாழ்வு மனப்பான்மை உள்ளது.

    Am I correct?




    ReplyDelete

Powered by Blogger.