நவீன சிகிச்சையின் மூலம் மூன்றுவாரக் குழந்தையின் ரத்தக் கசிவை நிறுத்திய டாக்டர்கள்
அமெரிக்காவின் கன்சாஸ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் மே 16-ஆம் தேதி ஒரு குழந்தை பிறந்தது. அஷ்லின் ஜூலியன் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை பிறந்து மூன்று வாரங்கள் ஆன நிலையில், எப்போதும் களைப்புடனே காணப்பட்டாள். அதுமட்டுமில்லாமல், அடிக்கடி வாந்தி எடுத்துக்கொண்டு அழுதுகொண்டே இருந்தாள்
பிறந்தபோது சாதாரணமாக இருந்த குழந்தை இப்படி இருப்பதைக் கண்ட அவளது பெற்றோர்களான ஜரெட் ஜூலியனும், கினாவும் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவளது மூளை நாளத்தில் சிறிய அளவில் ரத்தக்கட்டு ஒன்று ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். அதிலுள்ள ரத்தம் வெளிவரத் துவங்கியதால் குழந்தைக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டது தெரியவந்தது.
எனவே, அந்த ரத்தம் முற்றிலும் வடிவதற்காக சிறிய வடிகுழாய் ஒன்றை அந்த ரத்தக்கட்டியினுள் நுழைத்த மருத்துவர்கள் ஒரு சிறிய வயரின் உதவியுடன் பசையைத் தடவி அந்த துவாரத்தை ஒட்டியுள்ளனர். அசாதாரணமான இந்த நவீன சிகிச்சைமுறை பலனளித்ததால் குழந்தை அஷ்லின் நன்கு தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment