Header Ads



சந்திரனுக்கு ரோபோ குரங்கை அனுப்ப தீர்மானம்

சந்திரனில் மனிதன் காலடி வைத்து விட்டான். இதை தொடர்ந்து தற்போது அங்கு ஆய்வு பணி மேற்கொள்ள விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அதற்காக ஒரு குரங்கை அனுப்புகின்றனர். அது உயிருள்ள குரங்கு அல்ல.

அது மின்வயர்கள், போல்ட் மற்றும் நட்டுகளால் ஆன ரோபோ (எந்திர) குரங்கு. இதை ஜெர்மனி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த மையம் பிரேமன் நகரில் உள்ளது.

இந்த “ரோபோ” குரங்கு மரத்தில் கிளைக்கு கிளைதாவக் கூடியது. அதற்காக இரும்பினால் கைகள் மற்றும் கால்கள் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் இக்குரங்கு சந்திரனில் உள்ள பாறைகளின் மீது தாவி ஏறி மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பும்.

தற்போது கிரகங்களில் ஆய்வு மேற்கொள்ள அனுப்பும் விண்கலங்கள் சக்கரம் மூலம் நகர்த்தப்பட்டு ஆய்வில் ஈடுபடுத்தப்படுகிறது. மிக உயரமான இடங்களில் ஆய்வு மேற்கொள்ள புதுவிதமான முறையில் இந்த “ரோபோ” குரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் சந்திரனுக்கு அனுப்பப்படுகிறது.

No comments

Powered by Blogger.