சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் வரலாறு..!
(ஏ.எல்.ஜுனைதீன்)
முஸ்லிம்கள்
ஓரிடத்தில் குடியேறி அவ்விடத்தில் வாழத் தொடங்கியதும் அவர்கள்
குடியிருப்பதற்குரிய வீடுகள் அமைக்கும் போது தொழுகைக்கான பள்ளிவாசல் ஒன்றையும்
அமைத்துக் கொள்வது இஸ்லாமியர்களின் வரலாறு ஆகும்.
சாய்ந்தமருதில் முஸ்லிம்கள் வாழத் தொடங்கிய
காலத்தில் இந்த ஊரின் தென் பகுதி காடாக இருந்துள்ளது. அக்காட்டுப் பகுதியில்
மரங்களை வெட்டியெடுத்து தற்பொழுது பெரிய பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்தில்
மரங்கள், இலுக்குகள், கிடுகுகள் என்பனவற்றைக் கொண்டு தொழுகைக்கான சிறிய பள்ளிவாசல்
ஒன்றை தற்காலிகமாக அன்று அமைத்துக் கொண்டார்கள். இப்பள்ளிவாசல் முன்னர் முகைதீன்
பள்ளிவாசல் என அழைக்கப்பட்டது.
12 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய தஃவாப்
பணிக்காக பக்தாத் நகரிலிருந்து முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானி அவர்களின் சிஷ்யர்
இலங்கை வந்ததாகவும் அவர் அக்கால சிங்கள அரசனின் (கஜபாகு) புதல்வனது தீராத நோயைக்
குணப்படுத்தியதினால் அவருக்கு அந்த அரசன் கரைவாகுப் பிரதேசத்தைப் பரிசாகக்
கொடுத்து அங்கு காணப்பட்ட பள்ளிவாசல்களை முகைதீன் பள்ளிவாசல் என அழைக்கப்படல்
வேண்டும் என்றும் கட்டளையிட்டதாகவும்
இங்குள்ள முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர்.
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் 1691 ஆம் ஆண்டளவில்
அன்று மட்டக்களப்புக் கச்சேரியில் அடை அறவீட்டுக் கணக்கராக்க் கடமை புரிந்த
சதக்குலெவ்வை என்பவரினால் பரிபாலிக்கப்பட்டு வந்துள்ளது.
1870 ஆம் ஆண்டில் பிரதம மரைக்காயர்
மீராலெவ்வைப் போடி வன்னியனார் காலத்தில் சுமார் 1000 பேர் தொழக் கூடிய இட
வசதியுள்ள பள்ளிவாசலாக சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மாற்றம் பெற்றது. 1961 ஆம் ஆண்டில் பிரதம மரைக்காயர் மு.அ
அப்துல் கபூர் அவர்களின் காலத்தில் இப் பள்ளிவாசலுக்கு முன் பக்க மண்டபம் ஒன்று
அமைக்கப்பட்டதுடன் முகப்பு வேலைகளும் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டது.
தற்போதய சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் சுமார்
5000 பேர் தொழக்கூடிய இட வசதி கொண்ட நவீன இரு மாடிக் கட்டடமாக கட்டுவதற்கு 1985
ஆம் ஆண்டு பிரதம மரைக்காயர் எம்.ஐ.எம்.மீராலெவ்வை தலைமையிலான நம்பிக்கையாளர் மற்றும்
மரைக்காயர் சபையினரால் ஆரம்பித்து
வைக்கப்பட்டு 2003 ஆம் ஆண்டு பிரதம மரைக்காயர் ஐ.எம்.முகைதீன் காலத்தில் பூர்த்தி
செய்யப்பட்டதாகும். இப் பள்ளிவாசலில் இமாம்களாகக்
பணிபுரிந்தவர்கள் விபரம்,
|
அந்தப் பெரிய ஆலிம் எனது தந்தை மர்ஹூம் சிஹாப்தீன் அவர்களது தந்தையின் தந்தை என்பதும், யாசீன் ஆலிம் எனது தந்தையின் தந்தை என்பதும் சிலவேளைகளில் தெரியாமல் இருக்கலாம் என்பதற்காகத் தகவல் அளிக்கின்றேன்.
ReplyDeleteமீரா லெப்பே போடி வன்னியனார் என்பவர் எனது மனைவியின் தந்தையின் தந்தை என்பதுவும், அப்துல் கபூர் மரைக்காயர் இஸ்ஸதீன் போடியாரின் மச்சான் என்பதுவும், மீராலேப்பே மரைக்கார் எனது தந்தையின் சகோதரியின் மகன் என்பதுவும் மேலதிக தகவல்கள்.
ReplyDelete