பாலமுனையில் புதிய கடற்படைமுகாம்
(சேனையூரான்)
அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்குட்பட்ட பாலமுனைக் கிராமத்தில் சின்னப்பாலமுனை எனும் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த ஜஸ்வாடி எனும் இடத்தில் கடந்த வாரத்தில் திடீரென அங்கு வருகை தந்த கடற்படையினர் முகாம் ஒன்றை அமைத்துள்ளனர். ஒலுவில் துறைமுகமானது பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய இரு ஊர்களுக்கும் இடையில் அமையப்பெற்றுள்ளது. ஏற்கனவே ஒலுவில் துறைமுகத்திற்கு வடக்குப் புறமாக ஒரு கடற்படைமுகாமும், துறைமுகத்தின் உள்ளே ஒரு படைமுகாமும் இருக்க, தற்போது தென்புறத்திலுள்ள பாலமுனைக் கிராமத்திலும் திடீரென கடற்படை முகாம் ஒன்றை அமைத்துள்ளமை துறைமுகத்தின் பாதுகாப்புக் கருதியே எனக் கூறப்படுகின்றது. இருப்பினும், இது அப்பிரதேசத்தில் வாழும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் இப் படைமுகாம் விஸ்தரிக்கப்படுமானால் அண்மையில் வாழுகின்ற மக்களுக்கு பெரும் தடையாக அமையும் எனவும், இங்குவாழும் முஸ்லீம்களின் தனித்துவம், கலாசாரம் பாதிக்கப்படுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது எனவும் கூறப்படுகின்றது.
இப்படியெல்லாம் செய்வதுக்காகதான் வடக்கிற்கும் கிழக்கிற்கும் காணி போலிஸ் அதிகாரம் வேண்டாம் என்று அரசாங்கம் விமல் வீரவன்ச மூலம் இன்று நடக்கிற நடப்பு நமக்கு சொல்லிக்காட்டுது!
ReplyDelete