உள்ளுராட்சி சபைகளும், வீதி நிர்வாகமும்
(அபு ஆதில்)
நாடு முழுவதும் அரசாங்கம் வீதிகளை அமைப்பதிலும் அவைகளை பரிபாலிப்பதிலும் அதிகமான பணத்தையும் காலத்தயும் செலவிட்டு வருகின்றது. வீதிக்கட்டுமான விடயத்தில் அரசாங்கத்தை எவராலும் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒரு காலத்தில் மணல் மேடுகளாகவும் கல் மலைகளாகவும் இருந்த வீதிகள் தற்போது கார்பெட் வீதிகளாகவும் கொங்கிரீட் வீதிகளாகவும் மாறியுள்ளன. அநேகமான வீதிகள் வடிகான் வசதிகளையும் பெற்றுள்ளன.
நாட்டில் விலைவாசி அதிகரிப்பு மற்றும் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கும் மத்தியில் நிர்மாணிக்கப்படும் இந்த வீதிகள் சரியானமுறையில் இடப்படுகின்றதா? அமைக்கப்பட்ட உள்ளுர் வீதிகளை யார் பரிபாலிப்பது? உள்ளுராட்சி சபைகள் என்றால் அவர்கள் வீதி நிர்மாணத்தின் போதும் நிர்மாணிக்கப்பட்டத்தின் பின்னரும் கண்கானிக்கின்றார்களா? அல்லது அவைகளை கண்காணிக்கக்கூடிய அரச நிறுவனம் எது? பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில் செயப்பட்டுள்ள திவிநேகும,கமநெகும வீதிகள் வடிகான்கள் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதா? என்பதெல்லாம் கேள்விக்குறிக்குள் அடங்கியுள்ள இரகசியங்களாகும்.
வீதிகளை நிர்மாணிக்க வழங்கப்படும் பணத்தின் ஒருபகுதி பணத்தை பெற உதவிய அரசியல் வாதிக்கும் அவர்களது ஜால்றாக்களுக்கும் பங்குவைக்கபடுகின்றதா? இவைகளை கண்காணிப்பது யார்? இங்குள்ளவர்களா? அல்லது மேலுள்ளவரா? அமானிதங்கள் பாதுகாக்கபடுகின்றதா?
போடப்பட்ட சில வீதிகளை இப்போது காணவில்லை. சில வீதிகளுக்கு, வீதி போட்டதால் வீதியால் பயணிக்க முடிவதில்லை. திட்டமிடப்படாத வடிகான் அமைப்புகளின் காரணமாக நீர் தேங்கி நிட்காத சில பிரதேசங்களில் அழுக்கு நீர் தேங்கி நின்று துர் நாற்றம் வீசுவதுடன் நுளம்பு மற்றும் ஏனைய நோய்கிருமிகள் அந்த பிரதேசங்களுக்கு விநியோகிக்கபட்டுள்ளன. இவ்வாறான நீண்ட கால வேலைத்திட்டங்கள் செய்யப்படும் போது அந்தந்த உள்ளுராட்ச்சி சபைகளுக்கு பொறுப்பான பொறியியல்லாளர்களும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் வீட்டில் வெங்காயம் வெட்டிக்கொன்டிருந்தார்களா? ஏன் இவைகள் கண்காணிக்கப்படவில்லை.
இன்னுமொரு பாரிய குறை தனி நபார்களால் அவர்களது வீடுகளுக்கு நீரிணைப்புகளை பெறுவதற்காக வீதிகளை வெட்ட உள்ளுராட்சி சபைகளுக்கு பணம் கட்டப்படுகின்றது ஆனால் அந்த இடம் உள்ளுராட்சி சபையால் செப்பனிடப்படுவதில்லை. அதேபோன்றே நீர்வழங்கல் சபையும் திருத்த வேலைகளின் போது உடைக்கும் வீதிகளை சரியான முறையில் திருத்துவதில்லை. இவைகளை யார் கண்காணிப்பது?
ஆட்சிக்கு வர எத்தனிக்கும் போது நமக்குத்தந்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்ததின் பின்னர் உள்ளுராட்ச்சி சபை தலைவர்களும் உறுப்பினர்களும் நிறைவேற்றி உள்ளார்களா? என்றால் அது கேள்விக்குறியே.
உள்ளுராட்ச்சி சபைகளின் தலைவர்களே உறுப்பினர்களே உங்களுக்கு தரப்பட்டுள்ள அமானிதங்களை பாதுகாக்க முயற்சியுங்கள். ஒவ்வொரு வீதியாக சென்று பாருங்கள் திருத்தப்பட வேண்டிய வீதிகளை திருத்துங்கள் சுத்தப்படுத்த வேண்டிய வடிகான்களை சுத்தப்படுத்த முயற்ச்சி செய்யுங்கள் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் வடிகாங்களுக்கு மூடிகள் இட நடவடிக்கை எடுங்கள் பொறியியல்லாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உங்களுக்கு ஒத்துளைக்காவிட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் அப்போது தான் அடுத்த அமர்வுக்காக மக்கள் உங்களை அந்தக்கதிரையில் அமர்த்துவர்.
மிகவும் வரவேற்கத்தக்க கட்டுரை. இதே விடயத்துடன் தொடர்புடையதாக கல்முனை மாநகரத்தில் நடைபெறும் வீதி அமைப்புத் தொடர்பில் இடம்பெறும் மோசமான நடைமுறையினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது கல்முனைக்குடி சாஹிபு வீதியில் தேங்கும் வெள்ள நீரை கடலில் நேரடியாக இறக்கும் முயற்சியாக வீதியில் குழாய்களைப் பதிக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. மூண்றுமாத திட்டம் என்று விளம்பர பலகை இடப்பட்டுள்ளது. ஆனால் ஆறுமாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அரைவாசி வேலைகூட பூர்த்தியாகவில்லை. வீதியில் குடியிருக்கம் மக்கள் ஆறு மாதங்களாக மிகவும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். பைசிக்கிள்களைக் கூட வளவுக்குள் கொன்டுவர முடியாமல் அடுத்த வீதியில் ஆட்டோக்கள் வாகனங்கள் பைசிக்கிள்கள் என்பவற்றை நிறுத்தி வைக்கின்றனர். பாதுகாப்பில்லாமல் திருட்டுக்கள்கூட இடம்பெறுகின்றன. இவை எவற்றினையும் கண்டு கொள்ளாமல் வீதி வேலை செய்கின்ற பணியாட்கள் மாதத்தில் இருநாள் அல்லது முண்று நாட்கள் வந்து ஏதோ தானோ என்று ஏதேனம் செய்துவிட்டு சென்று விடுகின்றனர். அநாதரவான நிலையில் வீதி காணப்படுகின்றது. வேலைத்திட்ட விளம்பரப் பலகையில் கல்முனை மாநகர மேயர் ஹரிஸ் எம்.பி. மாநகர உறுப்பினர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் காட்சி தருகின்றன. இருப்பினும் இவர்கள் எவரும் இதில் அக்கறைப்பட்டு மக்களின் நிலைமையை உணர்ந்து வேலைத்திட்டத்தை வேகப்படுத்துவதாகத் தெரியவில்லை. சுற்றியள்ள மக்கள் மிகவும் ஆத்திரமுற்ற நிலையில் உள்ளனர். இன்னும் இவ்வீதி கவணிப்பின்றி இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால் மக்கள் வீயில் இறங்கி அவர்களின் பாணியில் நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலைதான் உள்ளது.அதன் பின் கொந்தராத்துக்காரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரின் மீதும் சட்டத்தின் பார்வை திரும்பும் என்பதனையும் சம்மந்தப்படடோர் புரிந்து கொள்ள வேண்டும். இதன் பின்னால் மறைந்துள்ளது பிரதேச வாதமா? அசமந்தமா? கொந்தராத்துக்காறர்களில் அவால்த்தனத்தின் விளைவா? எது என்பது வெளிச்சத்தில் நிச்சயம் வரும். ..........................................................கல்முனை சாஹிபு வீதி மக்கள்
ReplyDelete