Header Ads



ஹெல உறுமயவுடன் முஸ்லிம் கவுன்ஸில் சந்திப்பு


மாகாணசபை முறையை சிறுபான்மை மக்கள் தமக்கு வழங்கப்பட்ட விமோசனமாக கருதுவதால் அதில் மாற்றங்களை ஏற்படுத்தும்போது, அதற்கொத்த மாற்றுத் திட்டங்களுடனே அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படுவது அவசியமாகுமென முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா தூதுக்குழு, ஜாதிக ஹெல உறுமயவிடம் தெரிவித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிப்பதற்காக தொழில்நுட்ப ஆராய்ச்சி அணுசக்தி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள் ளனர். 

அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மாகாண அமைச்சர் உதய கம்மன்பில, ஊடகப் பேச்சாளர் நிஸாந்த சிறிவர்ணசிங்க ஆகியோர் 19ஆவது திருத்த பிரேரணை பற்றி விளக்கமளித்தனர். 

மாகாணசபை சட்டத்திலுள்ள 5 அம்சங்கள் நாட்டுக்குப் பாதிப்பாக அமைவதினால், அவற்றை நீக்கியே மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டுமென கோரிவருகிறோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தூதுக்குழுவிடம் விளக்கியுள்ளார்.

யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமிழ்த் தரப்பு இன்றும் தனிநாடு அமைக்க வேண்டும் என்ற மனப்போக்கில் செயற்பட்டு வருகிறார்கள். இந்த அதிகாரங்கள் குறித்து நாம் அச்சம் கொண்டுள்ளோம். வட, கிழக்கு அபிவிருத்தி செய்யப்படவேண்டும். அம்மக்களுக்கு சுபீட்சம் ஏற்படுத்தப் படவேண்டும் என்பதில் நூறு வீதம் உறுதியாக இருக் கிறோம்.

தமது கட்சி இதுகுறித்து சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. தமிழ்க் கூட்டமைப்பையும் சந்தித்துப் பேசுவதற்கு நாம் நேரம் கேட்டுள்ளோம். இதுவரை பதில் கிடைக்கவில்லை. நாம் கொண்டுள்ள நிலைப்பாடு குறித்து அவர்கள் விளக்கமளித்தால், அவற்றை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.