Header Ads



சவூதி அரேபியா பெண் ஹிந்தி திரைப்படத்தில்..!

சவூதி அரேபியாவின் பிரபல பெண்ணிய எழுத்தாளர் சமீரா அஸீஸ் 'ரீம்' என்கிற திரைப்படத்தின் வாயிலாக ஹிந்தி (பாலிவுட்) திரைப்படத்துறையில் காலடி எடுத்துவைக்கிறார்.

ரீம் படத்தின் திரைக்கதையை எழுத உள்ள சமீரா அஸீஸ் கூறுகையில் " 'ரீம்' ஒரு காதல் கதையாகும். சவூதி ஆணொருவர் இந்தியப் பெண்ணை மணந்து ஒரு பெண் குழந்தையும் பெற்றபின்பு, குழந்தைக்கு ஒரு வயது நிறைவுறுமுன்பே அத்தம்பதிகள் கருத்துவேறுபாட்டின் காரணமாகப் பிரிந்துவிடுகிறார்கள். குழந்தையை அதன் தந்தையிடமே விட்டுவிட்டு அந்த இந்தியப் பெண் இந்தியாவுக்குத் திரும்பிவிடுகிறார். அந்தத் தந்தையும் சவூதியில் வேறு திருமணம் செய்துகொள்கிறார். பின்னர் அப்பெண் குழந்தை வளர்ந்து குமரியாகி, தன் தாய் ஓர் இந்தியர் என்றறிந்து,  இந்தியாவின் மும்பைக்குத் தேடலாய் வருவதாகவும், அங்கே அன்னையைத் தேடும் தன் தேடலில்  உதவும் ஒரு வாலிபனுடன் காதல் வயப்படுவதாகவும் கதை அமைக்கப்பட்டிருக்கிறது 'ரீம்' திரைப்படம் நல்ல நகைச்சுவையை அளிப்பதாக அமையும் " என்று கதாசிரியர் சமீரா அஸீஸ் தெரிவித்துள்ளார்.

34 வயதாகும் சமீரா அஸீஸ் சவூதி கிழக்கு மாகாண நகரான அல்கொபரில் பிறந்தவர். சவூதி அரேபியாவின் பிரபல எழுத்தாளராக, சமூக சேவகியாக, பெண்ணிய வாதியாக அறியப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. inneram

1 comment:

Powered by Blogger.