அமெரிக்காவில் செல்போன் சார்ஜருடன் சப்பாத்து
அமெரிக்காவில் செல்போன் சார்ஜருடன் கூடிய ஷு தயாரிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மூலம் செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றப்படுகிறது. தற்போது ஷுக்கள் மூலம் செல்போன்களில் சார்ஜ் ஏற்றும் வசதி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஷுவின் அடிப்பாகத்தில் பேட்டரிகள் மற்றும் வயர்கள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஷுவை அணிபவர் நடக்கும்போது அதில் இருந்து ஏற்படும் சக்தி மின்சாரமாக மாற்றப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.
இதன்மூலம் செல்போன்களில் சார்ஜ் ஏற்ற முடியும். இதை அமெரிக்காவின் பிட்ஸ் பர்க் சந்னேஷி மெல்லன் பல்கலைக்கழக நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.
இந்த பேட்டரி மூலம் செல்போன்கள், ரேடியோக்கள் போன்றவற்றில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஐ பேடில் சார்ஜ் ஏற்றும் அளவு பேட்டரியில் மின்சாரம் சேமிக்க 2 1/2 மைல் தூரம் நடக்க வேண்டும். அப்போதுதான் அதற்குரிய மின்சாரம் உற்பத்தியாகும்.
Post a Comment