Header Ads



கல்முனை பொலிஸாரின் வேண்டுகோள்..!

(றாசீக் நபாயிஸ்)

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மோட்டார் பைசிக்கள்கள் களவாடி செல்லப்படுவது தொடர்பாக பொது மக்கள் பின்வரும் விடயங்களை கடைப்பிடிக்குமாறு கல்முனை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுக் கொள்கிறார்.

தங்களது மோட்டார் பைசிக்கள்களை கண்ட கண்ட இடங்களில் நிறுத்தி வைக்காமல் BICYCLE PARK) இடங்களில் மட்டும் நிறுத்தி ஹென்டில் பூட்டை சரியாக போட்டு வைக்கவும்.

விசேடமாக ஹீரோஹொன்டா இன ஸ்பிளன்டர், பெசன்பிளஸ், மற்றும் பஜாஜ் இன டிஸ்கவரி  போன்ற மோட்டார் பைசிக்கள்களின் ஹென்டில் பூட்டுக்கள் இலகுவாக திறந்து கொள்வதற்கு வாய்ப்பாகவுள்ளதனால் இது சம்பந்தமாக உரிமையாளர்கள் கவனமாக இருக்கவும்.

தங்களது மோட்டார் பைசிக்கள்களை பாதுகாப்பான பைசிக்கள் நிறுத்தும் இடங்களில் (BICYCLE PARK யில் நிறுத்தி வைத்தாலும் நீண்ட நேரம் பைசிக்கள்களை தனிமைப்படுத்த வேண்டாம்.

தங்களது மோட்டார் பைசிக்கள்களின் டயர்களில் உள்ள இலக்கங்களை குறித்து பாதுகாப்பாக தங்கள் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மோட்டார் பைசிக்கள்களின் பதிவப் பத்தகம், ஆண்டு அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம் போன்ற தஸ்தாவேஜ்களை மோட்டார் பைசிக்கள்களில் வைக்காமல் தங்களது கைவசம் வைத்துக் கொள்ளவும்.

தாங்கள் நிறுத்தி வைத்த மோட்டார் பைசிக்கள் காணாமல் போகுமிடத்து காலதாமதமின்றி பொலிஸ் நிலையத்துக்கு அறியத்தரவும்.

சந்தேகத்திற்கிடமான முறையில் யாராவது நடமாடுவது அவதானிக்கப்பட்டால் உடன் கல்முனை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தரவும்.

பொலிஸ் நிலைய     : 0672229222
நிலைய பொறுப்பதிகாரி : 0672229226


No comments

Powered by Blogger.