Header Ads



குடும்ப உறவின் விரிசல் பிள்ளை வளர்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் - டாக்டர் ரயீஸ்


(J.M.Hafeez)

குடும்ப உறவின் விரிசல் பிள்ளை வளர்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அடிக்கடி பூகம்பம் ஏற்படும் இடத்தில் மரம் செடிகள் செழிப்புடன் வளராதது போல் குடும்பம் என்ற உறவில் அடிக்கடி ஏற்படும் குழப்ப நிலைகள் பிள்ளை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சிறுவர் உளவியல் நிபுணரும் சப்ரகமுவ பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் பேராசிரியருமான டாக்டர் எம்.எல்.எம்.ரயீஸ் தெரிவித்தார்.

(2.6.2013) மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் கல்வி அபிவிருத்திக்கான இன்சைட் நிறுவனம் நடத்திய கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மடவளை ஜூம்மா பள்ளி செயலாளர் மவ்லவி எம்.எம். ஹில்மி (தீனி) அவர்களின் ஆரமப உரையை அடுத்து டாக்டர் ராயிஸ் தெரிவித்ததாவது,

என்னிடம் சிகிட்சைக்கு வந்த நான்கு மாதக் குழந்தை ஒன்றின் உடலியல் கோளாறு ஒன்றிற்கான காரணம் பெற்றோரிடையே காணப்பட்ட ஒரு சச்சரவு காணமாக அமைந்திருந்து அது பின்னர் தீர்த்து வைக்கப்பட்ட நோய் குணமானது.

நான் அமேரிக்காவில் இருக்கும் போதும் என்னிடம் சிகிட்சைக்காக வந்த பத்து மாதக் குழந்தையின் அனைத்து ஆய்வு கூட அறிக்கைகளும் சாதாரண நிலையில் இருந்த போதும் குழந்தை நடத்தை மாற்றத்திற்கு உற்பட்nருந்தத. இதற்கு பெற்றோரின் பிரச்சினை காரணமாக இருந்தது கண்டறியப்பட்டது. இவ்வாறு பல்வேறு உதாரணங்களையும் ஆய்வு முடிவுகளையும் எடுத்துக் காட்ட முடியும்.

 மென்டலீவ் என்ற விஞ்ஞானியின் ஆய்வின்படி பரம்பரையாக ஆற்றல்கள் வெளிப்படும். அதற்கான எத்தகைய களத்தை பெற்றேர் அமைத்துக் கொடுக்கின்றனறோ அதன்படிதான் குழந்தை அதனை வெளிப்படுத்தும். உதாரணத்திற்கு ஒரு வித்தில் முளைத்து காய்கனி தரும் இயல்பு உண்டு. அது வெறுமனே வெளியாகி மரமாகி காய்காது.அதற்கான சுPழல் ஏற்படவேண்டும். கறுங்கல்லின் மீது அவ்வித்தை நாட்டி பலனை எதிர் பாhhகக்க முயொது. வளரும் போது முளையில் கிள்ளிவிட்டுஅதன் பலனை எதிர்பார்க்கவும் முடியாது. குழந்தைகள் என்பது ஒரு வித்து அதனை 10 வருடம் வரை வளர்க்கும் சூழல்தான் பெற்றோர். பத்து வயதின் பின் அது பெற்றோருக்கு அடிபணிவதைப் படிப்படியாக தாற்றிக் கொள்ளும்.

சிறுவர்கள் விடயத்தில் பின்வரும் விடயங்களை மனதிற்கொள்ளவேண்டும். முதலாவதாக அவர்களை நாம் சரியாக இனம கண்டு கொள்ளவேண்டும் பின்னர் ததற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். அங்கீகரித்த விடயத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். எச்சந்தர்பத்திலும் சிறுவர்களை குறை மதிப் பீட செய்யக்கூடாது. இத்தகைய விடயங்கள் எதிர்காலத்தில் அவர்களை வளமாக்கும என்றார்.





No comments

Powered by Blogger.