கிழக்கு மாகாணத்தில் பாலைப் பழத்தின் பருவ காலம் ஆரம்பம் (படங்கள்)
(ஏ. எல். ஜுனைதீன்)
மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளுக்கு அப்பால் இலங்கை நாட்டவர்களாலும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளாலும் ஆசையுடன் விரும்பி உண்ணப்படுகின்ற பழமாக ஆண்டாண்டு காலமாக இருந்து வருகின்ற பாலைப் பழத்தின் பருவ காலம் தற்பொழுது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஆரம்பமாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரைப் பிரதேசக் காடுகளிலிருந்து பறிக்கப்பட்ட பாலைப் பழங்கள் அம்பாறை மாவட்டத்திற்கு விற்பனைக்கு வருகின்றன. ஒரு கொத்து (நான்கு சுண்டுகள்) பாலைப் பழம் 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள உகந்தைப் பகுதி காடுகளில் உள்ள பாலைப் பழங்கள் பெரியனவாகவும் சதை கூடியதாகவும் கூடுதல் இனிப்புடையதாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
yummy and taste..I miss it past years.....
ReplyDelete