களுத்துறை மாவட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை..!
(ஏ.எல்.ஜுனைதீன்)
களுத்துறை மாவட்டத்தில் 14 பிரதேச
செயலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 1 இலட்சத்து 14 ஆயிரத்து 422 இஸ்லாமியர்கள்
வாழ்வதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் “ சமயம் மற்றும் மாவட்ட ரீதியில்
பிரதேச செயலாளர் பிரிவுகளின் சனத் தொகை விபரம்” எனும் தலைப்பில் இறுதிக் கணகெடுப்பின்
பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இம் மாவட்டத்தில் பிரதேச செயலக
ரீதியாக கணக்கெடுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு,
பிரதேச செயலகம்
|
இஸ்லாமியர்களின் எண்ணிக்கை
|
பேருவலை
|
56990 பேர்
|
பானந்துறை
|
26264 பேர்
|
களுத்துறை
|
12528 பேர்
|
பண்டாரகம
|
12251 பேர்
|
மதுகம
|
3012
பேர்
|
புலத்சிங்கள
|
2232 பேர்
|
பாலிந்தநுவர
|
624
பேர்
|
ஹொரண
|
172 பேர்
|
தொடங்கொட
|
93
பேர்
|
அகலவத்த
|
86 பேர்
|
மில்லனிய
|
57
பேர்
|
மதுராவெல
|
53 பேர்
|
இங்கிரிய
|
45
பேர்
|
வலல்லாவிற்ற
|
15 பேர்
|
|
|
இம்மாவட்டத்தில் மொத்தமாக 12
இலட்சத்து 17 ஆயிரத்து 260 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகக்
கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 10 இலட்சத்து 16 ஆயிரத்து 632 பேர்
பெளத்தர்களாகவும், 1 இலட்சத்து 14 ஆயிரத்து 422 பேர் இஸ்லாமியர்களாகவும், 39
ஆயிரத்து 773 பேர் இந்துக்களாகவும், 38 ஆயிரத்து 80 பேர் றோமன்
கத்தோலிக்கர்களாகவும் 8 ஆயிரத்து 29 பேர் ஏனைய கிறிஸ்த்தவர்களாகவும், 324 பேர்
ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்களாகவும் கணக்கிடப்பட்டிருப்பதாகத் தொகை மதிப்பு புள்ளி
விபரத் திணைக்களம் மேலும் தகவல் வெளியிட்டிருக்கிறது.
Post a Comment