இரண்டாம் தேசிய மொழியை கற்பதன் மூலம் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தமுடியும்
(J.M.Hafeez)
இரண்டாம் தேசிய மொழியை கற்பிப்பதன் மூலம் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தமுடியும். அவ்வாறு மாற்று மொழியை கற்பிப்பதன் மூலம் நாட்டு மக்களிடையே அமைதியை ஏற்படுத்தும் புன்னிய காரியத்திற்குப் பங்களிப்புச் செய்யயு; பாக்கிய் பெற்றவர்களே இரண்டாம் மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் என தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனப் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஆர் ஹேரத் தெரிவித்தார்.
அகலவத்தை, மத்துகம தேசிய மொழிக்கல்வி கற்கை நிறுவனத்தில் ஐந்து நாள் வதிவிடப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். வட,கிழக்கு உற்பட நாட்டில் பல பாகங்களையும் சேர்ந்த மூவின ஆசிரியர்கள் 61 பேர் வயது ஆவறுபாடு இன்றி இப்பயிற்சியை நிறைவு செய்தனர். சிங்களவர்களுக்கு தமிழையும் தமிழர்களுக்கு சிங்களத்தையும் இரண்டாம் தேசிய மொழியாகக்; கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே இப்பயிற்சி வழங்கப்பட்டது. அவ்வைபவத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது-
இன்றைய நிலையில் சட்டத்தாலோ சம்பிரதாயத்தாலோ இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது. இதற்கு மனப் பாங்கு மாற்றமும் மாற்று மொழி அறிவும் தேவை. எனவே இரண்டாம் மொழியை நாட்டு மக்களுக்கு வழங்கும் தேசிய கொள்கையை, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினூடாக அரசு முன்வைத்துள்ளது. அதனடிப்டையில் இரண்டாம் மொழிகற்பிக்கும் அல்லது கற்ற விரும்பும் சகலருக்கும் இங்கு பயிற்சித்திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. விரும்பியவர்கள் இந்நிறுவகத்துடன் தொடாபை ஏற்படுத்தி அதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு விவசாய விஞ்ஞானியால் விவசாயத்துறையில் அற்புதங்களை ஏற்படுத்த முடியும். ஆனால் இயற்கை அழிவால் ஏற்படு விபரீதத்ததை தடுக்க முடியாது. அதேபோல் ஒரு கட்டடக் கலைஞ்சனாலும் நூறு அடுக்குகளைக் கொண்ட கட்டிடத்தை அமைக்க முடியும். ஆனால் பூகம்பம் போன்ற இயற்கை அழிவைத் தடுக்க முடியாது. ஆனால் ஒரு நாட்டில் இனங்களுக்கிடையே ஏற்படப் போகும் ஒரு கலவரத்தையோ பாரிய இன மோதலையோ ஒரு ஆசிரியனால் தடுக்க முடியும். மொழிகற்பிக்கும் ஒருவனால் ஒரு நாட்டில் உள்ள சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும். இதனால் ஒரு நாட்டில் ஏற்படப் போகும் பாரிய அழிவுகளைத் தடுககலாம். அந்த வகையில் ஒரு ஆசிரியன் சிரேஷ்டமானவன்.
பங்கு பற்றுனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஹேரத் மற்றும் வளவாளர்களாகத் தொழிற்பட்ட அப்துல் லதீப், மொகமட் நிஸாம், மற்றும் ஆய்வு உத்தியோகத்தர் மொகமட் பிர்தவுஸ் உற்படப் பலர் கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment