'மீள் இணக்கத்தில் உயர்கல்வியின் பங்கு' யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்
(பாறூக் சிகான்)
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் யாழ். பல்கலைக்கழககும் இணைந்து ஏற்பாடு செய்த 'மீள் இணக்கத்தில் உயர்கல்வியின் பங்கு' எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் கிறின் ஹிராஸ் ஹோட்டலில் 133-06-2013வியாழக்கிழமை இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரதம விருந்தினராக முன்னாள் சர்வதேச நீதிமன்ற நீதிபதி எமிரஸ் மேனாஸ் விரிவுரையாளர் சி.ஜி.வீரமந்திரி கலந்துகொண்டு உலகத்திற்கு தேவை சமாதானத்திற்கான கல்வி எனும் தொனிப்பொருளில் கருத்துரைகள் வழங்கினார்.
இக்கலந்துரையாடலில் டாக்டர் றொகான் குணரட்ண, விரிவுரையாளர் ராஜரட்ணம் ஸகூல் சிங்கப்பூர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும், விரிவுரையாளருமான ரஞ்சித் சேனாரட்ண
,இ சாந்திகா கிரிம்புரெஹம முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், விரிவுரையாளர்கள் பெரதேனியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இதனை யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பகிஸ்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தங்களுக்க அனுப்பப்பட்ட அழைப்பிதழ்களில் பங்கரவாதம் தொடர்பான சொற்பதம் பாவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர.
இதன்போது கடந்த யுத்தத்தின் பின்னர் வடபகுதியில் ஏற்பட்ட மீள் இணக்கம் மற்றும் கல்வி தொடர்பாக ஆராயப்பட்டது. நாளைய தினமும் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment