Header Ads



மு.கா. பொதுபல சேனாவுக்கு எதிராக களமிறங்கியிருந்தால் அது கலவரமாக மாறியிருக்கும்

(எஸ்.அன்சப் இலாஹி)

அக்கரைப்பற்றில் இடம்பெறும் அபிவிருத்திகள் போன்று கல்முனையிலும் நடைபெறவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் அக்கரைப்பற்றில் அபிவிருத்திகள் நடைபெற வேண்டும் என்று அழுதிருக்கிறோம் ஏனென்றால் அபிவிருத்தியை தவிர மற்றைய எல்லாவற்றிலும் உடுத்திருந்த ஆடைகள் நொய்ய விட்டுவிட்டு அங்கு இருக்கின்ற அரசியல்வாதி இன்னும் சொல்லப்போனால் ஒரு விபச்சாரத்தைவிட மோசமான வேலையைத்தான் அக்கரைப்பற்றில் அரசியல் அதிகாரம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.

கல்முனை அபிவிருத்திப் அபிவிருத்திப்பெருவிழாவில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்படி கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

 நம்மவர்கள் சொல்வார்கள் உம்மாவுடன் போகப்போகிறாயா? ஓம் ஓம், வாப்பாவுடன் போகப்போகிறாயா ஓம் ஓம் இப்படி அபிவிருத்திக்காக இந்த சமூகத்தை துண்டு துண்டாக வெட்டியளித்துத்தான் அல்லது முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டாலும் முஸ்லிம்களுடைய பள்ளி உடைக்கப்பட்டாலும், அவர்களுடைய மதச் சுதந்திரம் மறுக்கப்பட்டாலும் அவை எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு எடுக்கின்ற அரசியல் அபிவிருத்திதான் இப்போது அக்கரைப்பற்றில் இருக்கின்ற அபிவிருத்தி, இது தேவையில்லை

அப்படி அக்கரைப்பற்றிலே நடக்கின்ற அபிவிருத்தி கல்முனை மண்ணுக்கும் வேண்டும் என்று தயவு செய்து நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் யாரும் நினைத்துவிடாதீர்கள். இன்றிருக்கின்ற அரசியல் சூழ் நிலை என்பது வேறு. அக்கரைப்பற்றில் இருக்கின்ற அரசியல் தலைமகனுக்கு பிரச்சினை இல்லை. ஒவ்வொரு கட்டத்திலும் குறிப்பாக திவிநெகும, பிரதம நீதியரசர் விடயம், பொதுபலசேனா பிரச்சினை என்று பல வந்த போதும் ஆதரித்தார். இப்போது 13 திருத்தம் வந்த போதும் ஆதரித்தார். இந்த முஸ்லிம்களுக்கு விரோதமாக போகின்ற போக்கு  இந்த அரசியல் ஊடாக தலைமுறையில் ஏற்படுகின்ற மாற்றம் போராட்டத்தினுடைய வழிமுறைகள் நோக்கங்களை, இலட்சியங்களை மாற்றும். அக்கரைப்பற்றில் உள்ள அரசியல் வாதிக்கு இதைப்பற்றி பிரச்சினை இல்லை இலங்கைக்கு உள்ளே நடக்கின்ற அரசியல் பற்றியும், பொதுபலசேனாவுக்கு பின்னால்யார் இருக்கிறார்கள், இராவணா பலசேனாவுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் இதனுடைய பின்னணி என்ன? இதனுடைய நோக்கம் என்ன என்பது பற்றி அவருக்கு பிரச்சினை இல்லை. இலங்கையை சுற்றி நடக்கின்ற புவியியல்சார் அரசியலில் இந்தியா என்ன காய் நகர்த்துகிறது சீனா என்ன காய் நகர்த்துகிறது இதனை மேலாட அமெரிக்கா என்ன யோசனை செய்கிறது என்பது பற்றியும், அரசாங்கத்திற்குள்ளே உள்ள அமைச்சர்களாக இருப்பவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பது பற்றியும் அவர்கள் யோசிக்கத்தேவையில்லை ஏனென்றால் அவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

தமிழர்கள் பலவீனப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் மீது பௌத்த தேசிய வாதம் அதனுடைய கொடும் பிடியை அதன் கோரப்பல்லை காட்ட முனைகிறது இந்த தருணத்தில் முஸ்லிம்கள் தங்களை பாதுகாக்கின்ற உரிமைக்கான அரசியல் ஒன்றைப்பற்றி யோசிக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பொறுத்தவரைக்கும் இனத்தை வைத்துத்தான் தன்னுடைய தீர்மானத்தை எடுக்க முடியும் சீனா இலங்கையிலே அளவுக்கு அதிகமாக ஈடுபாடு கொண்டிருக்கிறது என்கின்ற காரணத்தினால் இப்போது அமெரிக்கா சீனாவை இந்த நாட்டிலே கையை விட்டு இழுத்துவிட வேண்டும் என்பதற்காக சீனாவினுடைய துறைமுகங்கள் இலங்கையிலும் ஏனைய இரண்டு நாடுகளிலும் அமையப்பெற்றுள்ளது. இதனூடாக இலங்கையில் சீனாவினுடைய இறுக்கம் இன்னும் அதிகரிக்கும் அப்படி அதிகரிக்கின்ற போது அது எவ்வாறு முஸ்லிம் சமூகத்தை பாதிக்கப்போகிறது என்பதனை முஸ்லிம் சமுகத்தினுடைய தலைமைகள் யோசிக்கவேண்டும். அதாஉல்லா, றிசாட் போன்றோர் யோசிக்கவேண்டியதில்லை ஏன் அமைச்சரவையில் இருக்கின்ற இப்போது இனவாதம் பேசுகின்ற அமைச்சர்கள் ஏதாவதொரு இடத்தில் செவியேற பேசுகின்ற பேச்சுக்களை பிரித்துப் பார்க்கவேண்டிய தேவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு இருக்கிறது. 

பொதுபல சோனாவுடைய ஒவ்வொரு நகர்விலும் இதற்கு பின் யார் இருக்கிறார்கள் இதனுடைய நோக்கம் என்ன என்பதனை பற்றி தீர விசாரித்துப் பார்க்க வேண்டியது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்குத்தான் இருக்கிறது. அதனூடாகத்தான் முஸ்லிம் சமுகத்தை ஸ்தீரமாக வைத்திருக்க முடியும். பொது பலசேனாவுக்கு எதிராக ஏன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மௌனம் காக்கின்றது என்று கேட்டார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுபல சேனாவுக்கு எதிராக ஆரம்பத்தில் களமிறங்கியிருந்தால் முஸ்லிம்களுக்காக முஸ்லிம்கள் பேசுகின்ற போது சிங்களவர்கள் எல்லோரும் சிங்கள பௌத்தவாதம் கடும் போக்குவாதிகளோடு இணைந்திருப்பார்கள் அப்போது அது முஸ்லிம், தமிழ், சிங்கள கலவரமாக மாறியிருக்கும் ஆகவே முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற அளவிற்கு சிங்கள தலைமைகள் தயாராகின்ற சூழ் நிலையை பார்த்துக்கொண்டிருந்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை.

அதற்கு பிறகு சிங்கள சமுகத்தில் இருந்த இடதுசாரிகள் கதைக்கத்தொடங்கினார்கள், மென் போக்குவாதிகள் கதைக்கத் தொடங்கினார்கள் அப்படி முஸ்லிம்களுக்காக சிங்கள தலைமைகள் பேச ஆரம்பிக்கின்ற போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை அதனை தன்னுடைய பலமாக ஸ்திரப் பயன்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தது. பொதுபலசேனா முதுகு முள் முறிந்து உடைந்ததைப்போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கவேண்டும். 

அதுமாத்திரமல்ல 13வது சரத்தினுடைய திருத்தங்கள் தொடர்பாக இப்போது பேசப்படுகிறது சிறுபான்மையினர்களுடைய தலைவர்களாக அமைச்சர்களாக அரசாங்கத்திற்குள்ளே இருப்பவர்கள் 5பேர்தான் ஆனால் ஒரே ஒரு முஸ்லிம் சிறுபான்மையினத்தினுடைய தலைவர் அதாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய தலைவர் மாத்திரம்தான் 13வது சரத்தில் கைவைக்க விட மாட்டோம் என்று உறுதியாகச் சொன்னார். அதாஉல்லா ஒட்டு மொத்தத்தில் 13யை ஒழித்துவிட வேண்டும் என்று சொன்னார். றிசாட் ஊமையாக இருந்தார், டக்ளஸ் வராமல் விட்டார், ஆறுமுகம் தொண்டமான் இருந்தும் தெரியாது இல்லாததும் தெரியாது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமைதான் சிறு பான்மைக்காக பேசியது. முஸ்லிம் காங்கிரஸ் பேசாது விட்டிருந்தால் இடது சாரிகள் என்று கூறுபவர்கள் டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் தைரியமாக தனித்து நின்று பேசியிருக்கமாட்டார்கள் ராஜித பேசியிருக்கமாட்டார். ஆனால் இது சிறு பான்மைக்கு செய்கின்ற அநீதி என்பதனை பேசியிருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் அவர்கள் எல்லோருமே களமிறங்கினார்கள் நமது தலைமைக்கு பக்கபலம் சேர்க்கின்ற அளவிற்கு பேசினார்கள். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தைவிட்டு வெளியேறும்வரை அல்ல வெளியிறக்கும்வரை இருக்கவேண்டும். வெளியிறங்கிவந்து முஸ்லிம்களுக்காக நாங்கள் பேசுகின்ற போது எங்களை தூக்கி எறிந்தார்கள் என்று சொல்லும் வரைக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கவேண்டும் இவ்வாறு இதற்கான காரணங்களை ஏற்கனவே கூறிவந்தேன் அதற்கு என்னை விமர்சித்தார்கள் அல்லாஹ்வின் உதவியால் அதில் இருந்து ஒரு மாதத்தின் பின்னர் அதே அமைச்சரவையில் நமது தலைவர் இருந்தமையால்தான் 13வது சரத்தை எதிர்த்து பேசமுடிந்தது. இப்படி சரியான நேரம் பார்த்து காலம் பார்த்து தீர்மானம் எடுக்கின்ற அதற்காக பேசுகின்ற அமைப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது. சிலர் பேசுகிறார்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்திருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இயக்கம் முஸ்லிம்களுடைய அதிகப் பெரும்பாண்மையோடு பாராளுமன்றத்தில் அரசியல் அதிகாரத்தில் இருக்கின்றது என்கின்ற செய்தி ஒன்றே போதும், இக் கட்சியின் இருப்பு மாத்திரமே போதும் வேறு ஒன்றும் செய்யத்தேவையில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மேலும் கூறினார்.

5 comments:

  1. முஸ்லிம் காங்கிரஸை அளிக்க ஒலுவில் பிரகடனம் நடத்திய தவம் அவர்களே உங்களைப்பற்றி எங்களுக்கு நன்கு தெரியும், உமது ஒவ்வொரு நகர்விலும் எவ்வளவு கள்ளத்தனமும் குள்ளதனமும் இருக்குமென்பதை கல்முனை மக்கள் முஸ்லிம் காங்கிரஸின் பொய்களில் மடயர்களாகும் அவர்கள் அறியாவிட்டாலும் நாங்கள் அறிவோம், எதை சாதிக்க வேண்டுமானாலும் கலவரத்திலும் கால்வாரிவிடுவதிலும் இறங்கும் உமது செயல்கள் என்னில் அடங்காதவைகள். அக்கரைப்பற்று பிரதேச சபையால் போடப்பட்ட வீதிகளில் நீர் மேற்கொண்ட கொள்ளைகள் மற்றைய ஏனைய மோசடிகளின் காரணமாக அக்கரைப்பற்று மக்களின் அழுத்தத்தின் உச்சதினாலையே உம்மை அதாவுல்லா புறக்கணித்தார். அரசியல் முகவரிக்காய் இன்று உனது நரித்தனத்தை பாவித்து கல்முனை மக்களை பொய்கள் மூலமும், அதாவுல்லாவுக்கு எதிரான அவர்களின் எண்ணத்தில் மேலும் மெருகூட்டி, அந்த அதாவுல்லாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளாலே நீர் மாகாண சபை உறுப்பினர் ஆனது புத்தியுள்ள மனிதர்களுக்கு வெளிச்சம். இப்போது இங்கு வந்து மக்களை உனது பேச்சாற்றலினால் மூளைச்சலவை செய்யபாக்கிறாய். சிங்கள

    இடதுசாரிகளிடம் இருந்து பொது பல சேனாவுக்கு எதிர்ப்பு வாரமால் விட்டு இருந்தால் இன்றுபோல் என்றுமே மௌனம் சாதிக்குமா, முஸ்லிம்களின் குரல் என்று சொல்லிக்கொண்டு ஏமாற்று வியாபாரம் செய்யும் முஸ்லிம் காங்கிரசுக்கு கலவரத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மாத்திரமா வலிமை உள்ளது. அரசாங்க அமைச்சர் ஒருவரே கூட இந்த சேனாக்கள் மஹிந்த குடும்பத்தின் ஆசிர்வாததிலையே இயங்குகின்றது என்று வெளிபடையாக கூறும்போது உங்களுக்கு மட்டும் ஏன் கூற முடியாதுள்ளது. கோதபாய கோபித்து விடுவாரா இல்லை அரசியல் தஞ்சத்தின் மூலம் உமது கட்சிகாரர்களுக்கு கிடைக்கும் சுகபோகங்கள் இல்லாமல் போய்விடும் என்ற பயத்தினாலா...?
    அரசியல் சாணக்கியம் ......... மண்ணாங்கட்டி அது இதுண்டு பூகாட்டாமல் நாங்கள் அளித்த வாக்குகளுக்கு பதில் கூறிவிட்டு செல்....

    ReplyDelete
  2. என்னா சார் இது ........ நீங்க தவிசாளராக இருக்கும் போது செய்தா அது அபிவிருத்தி.... நீங்க பற்றபக்கம் இருக்கும் போது செய்தா அது விபச்சாரமா??? நாம் அனைவருமே முஸ்லீங்கள்.. நீங்கள் ஒருவகையில் எம் சமூகத்திற்கு உதவி செய்கிறீர்கள் .... உங்கள் பழைய தலைவர் ஒருவகையில் சமூகத்தை அபிவிருத்தி செய்கின்றார். இதில் விபச்சாரம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை .. அல்லாஹ் நல்லவர்களைக் கொண்டும் கெட்வர்களைக் கொண்டும் முஸ்லீங்களுக்கு எதோ ஒரு வழியில் நலவை நாடுகிறான்... இதில் நல்வர்கள் யார் கெட்வர்கள்கள் யார் என்று அறிந்த ஒருவன் அவனே... எனவே தயவு செய்து நமக்குள் அபிவிருத்தி என்றும் முஸ்லீங்களின் உரிமை என்றும் போட்டி பொறாமை கொள்ளாமல், நமக்குள் நாம் சண்டை கொள்ளாமல், அல்லஹ் தந்த பதவியைக் கொண்டு முடியுமானவரைக்கும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் சேவை செய்யவும்...... நாம் உங்களுக்கு வாக்களித்தது அதாவுல்லாவை எதிக்கவோ அல்லது அக்கரைப்பற்றுக்கெதிராக அறிக்கை விடவோ அல்ல மாறக மக்களுக்கு நிறைந்த சேவைகளினை வளங்க... உங்களுக்கு வாக்களித்ததில் நானும் ஒருவன் என்ற வகையில் சொல்கின்றேன்....

    உங்களுக்கு அமைச்சர் அதாவுள்ளாவுடன் சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்குமாயின் அதை அரசியலுக்கள் கொண்டு வர வேண்டாம். பிளீஸ்

    இப்படிக்கு
    அனைத்து ஊரையும் நேசிக்கும் ஒருவன்.....

    ReplyDelete
  3. எத்தனை நாட்களுக்கு தலைவர் இந்த கொள்கையில் விடாப்பிடியாக இருக்கப்போகின்றார் என்று பார்ப்போம்..! திவிநெகும், பிரதம நீதியரசர் விவகாரங்களில் அவர் நடந்துகொண்ட விதத்தினை முஸ்லிம் காங்கிரஸ் நலன்விரும்பிகள் கூட இன்னும் மறக்கவில்லை. திவிநெகும விவகாரத்தில் கிழக்கு மாகாணசபை குழுத்தலைவர் மீது நடத்தப்பட்ட விசாரனையின் முடிவுதான் என்ன???

    ReplyDelete
  4. றமீஸ் அவர்களின் பதில் மிகச்சரியானது.

    ReplyDelete
  5. அதா விபச்சாரம் செய்கிறார் என்பதை போல ,,,உங்கள் கட்சி தலைமையும் அதன் உறுப்பினர்களும் அதையே செய்கின்றனர் ..ஆனால் வித்தியாசம் உங்கள் கட்சி தலைவர் அடிக்கடி வெளிநாட்டு சுற்றுபிரயாணங்கள் செய்ய அரசியல் வியாபார விபச்சாரம்...அதாவோ குண்டான் சட்டி அரசியல் செய்து அக்கரைப்பற்றில் ஆட்சி செய்வதுடன் கூடிய கொந்தராத்து கொமிசன் அபிவிருத்தியையும் கட்சிதமாகவே செய்கிறார்....ஆனால் இரு தரப்புமே ஒரே குட்டையில் முளைத்தவை தான்.

    ReplyDelete

Powered by Blogger.