இரண்டரை வயது மகளின் சாட்சியம் - தந்தைக்கு ஆயுள் தண்டனை
தாய் கொலை வழக்கில், மகளின் சாட்சியத்தால், தந்தைக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியா - உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சர் மாவட்டம், தினாயீ நகரைச் சேர்ந்தவர், லோகேஷ். இவருக்கும், கவிதா என்ற பெண்ணுக்கும், 2005 பிப்ரவரி, 18ல், திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின், இருவரும் கிரேட்டர் நொய்டாவிற்கு குடிபெயர்ந்தனர். இந்த தம்பதியின் இரண்டரை வயது மகள் தன்னு.
இந்நிலையில், லோகேஷுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த கவிதா, தன் கணவரை கண்டித்தார். கோபமடைந்த லோகேஷ், தன் சகோதரன் தர்ம பிரகாஷûடன் சேர்ந்து, 2008 செப்டம்பர், 11ல், கவிதாவை, உலக்கையால் அடித்துக் கொன்றார். இதை நேரில் பார்த்த, மகள் தன்னுவையும், இருவரும் மிரட்டியுள்ளனர்.இந்த கொலை வழக்கில், லோகேஷின் மகள் அளித்த சாட்சியத்தை, முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொண்ட, மாவட்ட நீதிபதி, கொலைக் குற்றவாளிகள் இருவருக்கும், ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
Post a Comment