Header Ads



ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் ஆயுதங்களை வாங்கும் முஸ்லிம் நாடுகள்..!

இஸ்ரேல் கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் மற்றும் நான்கு அரபு நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருவதாக பிரிட்டன் அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டன் வர்த்தக, திறன் மற்றும் கண்டுபிடிப்பு திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

இதில் இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவை பேணாத முஸ்லிம் நாடுகள் அதனிடமிருந்து பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பாகிஸ்தானுடன் அரபு நாடுகளான எகிப்து, அல்ஜீரியா, மொரோக்கோ மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் வர்த்தக உறவை பேணுவதாக கூறப்பட்டுள்ளது. tn

1 comment:

  1. enatha alika antha ename kasu kodukuthu ethuthan enraya nilamai

    ReplyDelete

Powered by Blogger.