'மாடு அறுப்பதற்கு எதிரான புண்ணிய கருமத்தில் ஈடுபடுபவர்கள் சுவர்க்கம் செல்வது திண்ணம்'
(ஏ.எல்.ஜுனைதீன்)
“ மாடு வெட்டுவது நாட்டுக்கு சாபக்கேடு” என்ற தலைப்பில் சிங்கள ராவய அமைப்பினரால் கதிர்காமத்திலிருந்து அலரி மாளிகை வரையிலான பாத யாத்திரையில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டன.
இப் பாத யாத்திரை இன்று 26 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது. இப்பாத யாத்திரையில் “ மாடு அறுப்பதைத் தடை செய்.” “மாடு அறுப்பவர்களை நாடு கடத்து”. என்பன போன்ற கோஷங்களை எழுப்பியவாறு தேசியக் கொடி, பெளத்தக் கொடிகளை ஏந்தியவாறு கொள்ளுப்பிட்டியை வந்தடைந்த குழுவினரை பட்டாசு கொளுத்தி ஒரு சிலர் வரவேற்றனர். பொலிஸார் இவர்களை காலி முக வீதியாக அலரி மாளிகை செல்வதற்கு அனுமதிக்கவில்லை.
பாத யாத்திரையில் சென்றவர்கள் விநியோகித்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
உயி நீத்த போவத்தே இந்தரதன ஹிமியின் பெயரால், தர்ம தீபகத்தில் மாடு அறுப்பதை நிறுத்து. போவத்தே இந்தரதன தேரரின் பெறுமதியான உயிரைத் தானம் செய்து பெரு மூச்சு விட்ட போதிசத்தர் போன்று பெறுமதியான கொள்கைகள் பல வைத்துத்தான் இவருடைய மரணத்தால் இந்நாட்டிலுள்ள பெளத்தம் மற்றும் ஏனைய சமயத்தைச் சேர்ந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
நாம் சப்தமில்லாமல் தூங்கி விட்டால் உயிர்நீத்த போவத்தே இந்தரதன தேரருக்கு செய்யும் அது ஒரு அகெளரவமாகும். எனவே சமயங்கள் பாராமல் சுயாதினமாகச் சிந்தித்து நாம் அனைவரும் செயல் படுவோம்.
வெளி நாட்டவர்களின் வருகைக்குப் பிறகு களவு, பொய், மதுபாணம் அருந்துதல் என்பனவற்றுடன் எமது ஆச்சி அம்மா என்று சொல்லுகின்ற பால் தரும் பசுவை அறுத்து இறைச்சி சாப்பிடுவது இன்று வழமையாகிவிட்டது.
மாட்டு இறைச்சியில் குளோஸ்டோல், டொக்சின் (TOXIN) என்பன போன்ற உடலுக்கு உதவாத பல பதார்த்தங்களும் இருக்கின்றன.
நம்மவர்கள் வளர்க்கும் மாடுகளை இறைச்சிக்காக விற்பவர்கள் இல்லவே இல்லை. மாடுகள் கூடுதலாகக் களவாடப்பட்டே அறுக்கப்படுகின்றன.
இந்த புண்ணியம் பூத்த பூமியில் நாள் ஒன்றுக்கு 5000 மாடுகள் அறுக்கப்படுகின்றன. இதனால் இந்த புண்ணியம் பூத்த பூமி காலையில் தினமும் இரத்தத்தால் நனைந்து வெள்ளமாகப் பாய்கின்றது.
எனவே இந்த புண்ணியம் பூத்த பூமியில் பிறந்த பெளத்தர்கள் தீயினால் மரணித்த போவத்தே இந்தரதன தேர்ருக்கு செய்யும் நன்றிக் கடனாக உயர் அதிகாரிகளும் நாம் எல்லோரும் ஒன்றினைந்து இதற்கு முன்னின்று செயல்படுவோம். மாடு அறுப்பதற்கு எதிராக செயல்படுகின்ற புண்ணிய கருமத்தில் ஈடுபடுபவர்கள் சுவர்க்கம் செல்வது திண்ணம்.
சிங்கள ராவய தேசிய அமைப்பு,
மிருக பாதுகாப்புக் குழு
மிருக ஆரோக்கிய குழு.
பயித்தியம் நன்கு தலைக்கு ஏறி விட்டது இதற்கு உரிய கூலி விரைவில் வரும் அதுவரை பொறுத்து இருப்போம்.
ReplyDeleteசுவர்க்கம்?.... ஏன் இவர்கள் சிந்திக்கவேமாட்டார்களா?அல்லது சிந்திக்கத்தெரியாதா?
ReplyDeleteமாடு அறுப்பதை நிறுத்த ஊர்வலம் எதற்க்கு
ReplyDeletetender விடுவதை அரசு நிருத்தினால் மாடுகள்
முழு நாட்டிலும் பல்கிப் பெருகி உங்கள்
தர்மத்தை போசித்து வளர்க்கும்,வயல்
வெலிகளை பாது காத்துத்தரும்,1 நாளைக்கு
பல மனிதர்கள் அறுத்துக் கொள்வார்கள்.
இதை விட பல சுவையான நிகழ்வுகள் நடக்கும்.
மாட்டிரைச்சி இல்லாவிட்டால் எந்த முஸ்லிமும்
மரணித்து விட மாட்டான்.( இது பொலொணறுவையில்-
பரீட்சிக்கப்பட்ட விடயம், tender முடக்கப்பட்டு மாமிசக்கடை
சில மாதங்கள் மூடப்பட்டது உல்லூராட்சி அமைப்பிற்கு
வருமானம் இல்லாமல் போக கடைக்காரர்களைத் தேடி
அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது ) அவர்கள் எதிர்
பார்த்ததுபோல் எந்த முஸ்லிமோ,கிரித்தவனோ
எதிர்ப்புக் காட்டவில்லை, இரைச்சி அதிகமாக உண்னுபவர்களை
கணக்கெடுத்தால் விளங்கும் சாமியார்களுக்கு!
Maadu mattum vettaamal Meen pidippathu. Kooli vettuvathu ...ect. Seyhiravar hal shari yaana valiyil ieukkiraarhal enru raavaya sollaamal solhirathu.
ReplyDeleteAANAAL Bauda matham solhirathaa?